Tuesday, November 30, 2010

அஜித் ஹிட் பாடல்கள் !!

அஜித் ஹிட் பாடல்கள் என்று யூடுயூப்இல் தேடினால் ஒண்ணுமே வரல. அது ஏன் என்று எல்லாருக்குமே தெரியும். அஜித்க்கும் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். அஜித்க்கு ஏ அர் ரகுமான் இசையமைத்தால் கூட பாடல்கள் தேற மறுக்கின்றனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை.  இத்தனைக்கு விஜய்க்கு எந்த இசை அமைப்பாளர் பாடல் போட்டாலும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் வண்ணம் நன்கு அமைந்து விடுகிறது. பாடல்கள் நன்றாக இல்லை என்றால் கூட அவர் நடனத்தில் பாடல்கள் ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது .அது அவருடையோ அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வாய்ப்பு இங்கு இல்லை. அது மட்டும் இல்லை நல்ல பாடல்கள் கூட இவர்க்கு நடனம் நன்கு வராது என்று சுமார் என்று ஆன பாடல்கள் உண்டு . ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானிப்பதை இங்கு நீங்கள் காணலாம்.
விஜய் ஹிட் பாடல்கள் என்றால் ஒரு 50 முதல் 100 பாடல்கள் வந்து நிற்கும். இதுவே அஜித் என்பதால் 10 பாடல்கள் தேடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகி விட்டது. இதோ எனக்கு பிடித்த அஜித்இன் ஹிட் பாடல்கள் ( நான் கேட்கும் பாடல்கள் என்று கூட சொல்லலாம் )

பில்லா - சேவல் கொடி


உல்லாசம் - யாரோ யார் யாரோ


தீனா படத்தின் பாடல்கள் - வத்தி குச்சி


அமர்க்களம் பாடல்கள் - மேகங்கள் என்னை தொட்டு


வில்லன் - ஒரே மணம்


முகவரி - ஏ நிலவே


ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ


கிரிடம் - கனவெல்லாம் பலிக்குதே


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தன தென்றலை


ஆசை - கொஞ்ச நாள் பொறு தலைவா


காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்


காதல் மன்னன் பாடல்கள் - உன்னை பார்த்த பின்பு நான்


இதில் எதாவது பாடல்கள் விட பட்டு இருந்தால் பின்னூட்டம் போடவும்.

3 comments:

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

கிரீடம்- அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
சிட்டிசன் - மேற்கே உதித்த சூரியனே
காதல் கோட்டை- சிகப்பு லோலாக்கு
ரெட்டை ஜடை வயசு- காஞ்சி பட்டு சேலை கட்டி
இன்னும் இருக்குங்க.. சும்மா தோணுனதை தட்டினாவே நிறைய வரும்

மதுரைவீரன் said...

" சும்மா தோணுனதை தட்டினாவே நிறைய வரும் "
சும்மா தோணுனதை விட மனதில் ஆழமாக பதிந்த பாடல்களை இங்கு சொல்லி உள்ளேன்.
நீங்கள் சொன்ன பாடல்கள் அந்த காலத்தில் நன்றாக இருந்த பாடல்கள். ஆனால் காலத்தால் நிலைத்து நிற்க வில்லை.

Post a Comment