Wednesday, February 17, 2010

அழகிரி பிறந்தநாளில் மதுரை

மதுரை கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்டிருந்த விழா மேடை. ( படங்கள் : திரு.மணியரசன்... அவருக்கு நமது நன்றி )


  
 
 
  
 

Sunday, February 14, 2010

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதலர்தினம் என்றாலே நமக்கு எல்லாம் ( தப்பு.. எனக்கு)  திரைப்படங்கள் தான் ஞாபகம். நேரில் பார்த்ததை விட திரைபடத்தில் அதிகம் பார்த்து இருக்கிறேன்.
குறிப்பாக நமது இயக்குனர் கதிர் எடுத்தல் அதில் ஒரு காட்சியில் காதலர் தினம் உறுதியாக வரும். காதலர் தினம் என்று திரைப்படத்திற்குப் பெயர்வைக்கும் அளவுக்கு காதல் மீது பற்று கொண்டவர். அவரது திரைபடத்தில் பெரும்பாலும்  காதல் தான் கதை, கதாநாயகன் எல்லாம் . எதாவது ஒரு கட்சியில் நாயகன் நாயகிக்கு காதல் கடிதம் தீட்டுவது போன்று வரும். அதில் கூட அவரது கையெழுத்து இடம்பெறும்.( எதோ செண்டிமெண்ட் போல) ஆனாலும் அவர் கையெழுத்து நன்றாக தான் இருக்கும்.

Friday, February 12, 2010

மீனாட்சியம்மன் கோவில் - 360 டிகிரி


கோவில் உள்ளே சென்று பார்த்தல் எப்படி இருக்குமே அதை அப்படியே நமக்காக இந்த வலைதளத்தில் நிறுவயுள்ளனர் .வெளிநாடுகளில், வெளிஊர்களில் இருப்பவர்களுக்கும் இந்த தளம் முகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

http://www.view360.in/virtualtour/madurai/
கோவிலின் அதிகாரபூர்வ தளம் : http://www.maduraimeenakshi.org/

Sunday, February 7, 2010

மதுரை மற்றும் தமிழ் சினிமா

நீண்ட நாட்களாக நான் இதை பற்றி சிந்தித்து இருக்கிறேன் எனது நன்பர்களுடன் பேசி இருக்கிறேன். இதோ உங்களுக்காக

இப்போது மதுரையை பற்றி தமிழ் சினிமாவில் நீங்கள் அதிகம் பார்க்கலாம்.
முன்பு ஒரு காலத்தில் ஒன்று அல்லது இரண்டு சினிமாவில் மதுரையை பற்றி வரும். ஆனால் இன்று அனைத்து திரைப்படங்களில் நீங்கள மதுரையை பார்க்க முடியும்.

இப்பொழுது மதுரை ஒரு வெற்றிக்கான (sentiment)முறை ஆகிவிட்டது.

முன்பு மக்கள்திலகம் எம் ஜி ஆர் நடிப்பில்
" மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் " ,
"மதுரைவீரன் " ஆகிய படங்கள் வந்தது.


அதற்கு பிறகு அவ்ளோவாக மதுரையை காணமுடியவில்லை.
பின்பு விஜயகாந்த் மற்றும் ராமராஜன் திரைப்படங்களில் மதுரையை பார்த்து இருக்ககூடும். ( அதுவும் ஒன்று இரண்டு பாடல் காட்சிகளில் தான்)

"நேருக்கு நேர் " - மனம்விரும்புதே உன்னை பாடல் - திருமலை நாயகர் மகாலில் படமாக்க பட்டது
"கள்ளழகர் " - விஜயகாந்த் படம்

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

எனக்கு தெரிந்து விஜய் நடித்த கில்லி திரைபடத்தில் ஒரு காட்சி மதுரை மீனாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள மேற்கு கோபுர வாசலில் படபிடிப்பு நடந்தது.
அந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகம் மதுரையை நோக்கி புறப்பட்டது.

விஜயின் அடுத்த படத்தின் பெயர் " மதுர" ( படத்துக்கு பெயரில் மதுரை என்று வைத்தால் இன்னும் நன்றாக ஓடும் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்)
அதே கில்லி திரைப்படம் காட்சி படமாக்கப்பட்ட இடத்தில் எடுத்தார்கள் ஆனால் படம் தான் திரையரங்கை விட்டு வேகமாக வெளிய ஓடியது.

அஜித் ரசிகர்களுக்கும் - "ரெட்" என்ற ஒரு திரைப்படம் மதுரையை மையமாக வைத்து எடுத்த படம்.
( ஆனால் மதுரையில் ஒரு காட்சி கூட படமாக்க படவில்லை .....அது ...... அந்த படத்தை தோல்வியை சந்திக்க செய்தது..)

இதற்கு இடையில் " காதல் " என்ற திரைப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டது.
காதல் படப்பிடிப்பின் மக்கள் யாரும் நின்று வேடிக்கை கூட பார்க்கவில்லை. அப்போதுதான் பாரத் திரைக்கு வந்த புதிது. சந்தியா அந்த படத்தில் தான் அறிமுகம்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல்க்கு இரெண்டாம் படம்.
படம் வெளியான பிறகு அனைத்து திரை அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பிறகு விஷால் நடித்த "திமிரு" படம் மதுரையில் எடுத்து வெற்றி பெற்ற படம் என்ற பெயர் பெற்றது.

"வேட்டையாடு விளையாடு " திரைபடத்தில் கூட மதுரையில் பிரகாஷ் ராஜ் வாழ்ந்தது போல் கட்டி கமல் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்குவது போல் ஒரு காட்சி வரும்.
இயக்குனர் சேரனின் " தவமாய் தவமிருந்து"

"சுப்ரமணியபுரம் " படம் வந்த பிறகு
அந்த மதுரை அலை பண்மடங்கு உயர்த்து.


"வெண்ணிலா கபடி குழு "


"மாயாண்டி குடும்பத்தினர்"
"மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி"
"மதுரை சம்பவம்"
"மாமதுரை"

தற்போதைய "கோவா" திரைபடத்தில் கூட மதுரைக்கு ஒரு இடம் உண்டு.

இதை தவிர இன்னும் வரவிருக்கும் படங்களான
"துங்கா நகரம்"
மாட்டுத்தாவணி"
"கோரிப்பாளையம்"
இவை மதுரையில் உள்ள இடங்களின் பெயர் -- வரவிருக்கும் புதிய திரைபடத்தின் பெயர்


திரைப்பட பாடல்களில் கூட மதுரையை நீங்கள் பார்க்கலாம்.

மதுரை மரிகொளுந்து வாசம் - எங்க ஊர் பாட்டுக்காரன்
தென்மதுரை வைகை நதி - தர்மத்தின் தலைவன்
மதுரைக்கு போகாதடி - அழகிய தமிழ் மகன்
மதுரை குலுங்க குலுங்க - சுப்ரமணியபுரம்

மணிரத்னம் தனது படங்களில் ஒரு சில காட்சிகளில் மதுரையை பார்க்கலாம்

இருவர் - திருமலை நாயகர் மஹால் மற்றும் காந்தி அருங்காட்சியகம்பம்பாய் - கன்னாலனே பாடல் - திருமலை நாயகர் மஹால்


குரு - திருமலை நாயகர் மஹால்

எந்த ஒரு படமா இருக்கட்டும் அதன் வெற்றியை தீர்மானிப்பது மதுரை தான்.
மதுரையில் ஓடினால் அனைத்து இடங்களில் ஓடும்.

மதுரையில் இருந்து சினிமாவில் சாதனை புரிந்தவர்கள் பலர்.
அவர்கள் யார் என்று பார்போம்

எம் எஸ் சுப்புலக்ஷ்மி
இளையராஜா ( பன்னையபுரம் , தேனி)
விஜயகாந்த்
வடிவேலு
விவேக்
கனிகா
சாலமன் பாப்பையா
ராஜா - பட்டிமன்ற பேச்சாளர்
பரவை முனியம்மா

இயக்குனர்கள்
மணிரத்னம்
பாரதிராஜா - ( தேனி ஒரு காலத்தில் மதுரை மாவட்டத்தில் தான் இருந்தது )
பாலா
சேரன்
அமீர்
சசிகுமார்
சிம்புதேவன்

Thursday, February 4, 2010

மதுரைக்கு புதிது

அண்மையில் மதுரையில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு இந்த கடைகள் புதிது ஆனால் இவர்கள் பல காலமாக சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ளனர்.

போத்திஸ் - ஜவளிகடை


ஜாய் ஆலுக்காஸ்பீமா

ஆலுக்காஸ் (ஜோஸ்)
லலிதா

கீர்த்திலால்ஸ்வியாபாரத்தில் பலமுனை போட்டி உருவாகிஉள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தள்ளுபடி அள்ளிதருகின்றனர்.

முன்பு ஒரு களத்தில் மதுரையில் மக்கள் இவ்ளோ செலவு செய்யமாட்டர்கள் . ஆனால் இன்று அதையும் மாற்றி காட்ட பலபுதிய கடைகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பொங்கலை ஒட்டி போத்திஸ் செய்த அலங்கரஅணிவகுப்பு இங்கே
உழவர் திருநாள் பொங்கல். அதை இப்போது யாரும் நினைத்து கூட பார்ப்பது இல்லை. அப்படி இருக்கும் நேரத்தில் போத்திஸ் நிறுவனத்தினர் இந்த சிறப்பு அலங்காரம் செய்து மக்கள் அனைவரையும் ஈர்த்தனர்.