ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது பிரச்சனை மிக பிரமாண்டமாக வெடித்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அப்படி என்றால் என்ன ? என்று கூட சில பேர் கேட்பார்கள. ஒன் இல்லை ரெண்டு இல்லை 1,76,00,000 கோடி ரூபாய் ஊழல். யார் பணம் இது எல்லாம் மக்கள் பணம். யார் வந்து கேட்க போறாங்க ? என்ற அலட்சிய போக்கில் அடித்த கொள்ளை.
1,76,00,000 கோடி - 17,60,00,00,00,00,000 முடியல . பார்போம் எதிர் கட்சிகள் ஒரே முடிவாக உள்ளனர்.
அதாவதுமுன்பு எல்லாம் ஊழல் என்பது எதோ சில கோடிகளில் நடக்கும் இப்போது எல்லாம் ஆயிரம், லட்சம் கோடி ஊழல் வந்து விட்டது.
மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இதில் ஒரு பகுதியை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தால் நாடு எங்கயோ போய் இருக்கும். ( முதல்வன் பட வசனம் தான் )
கிரிகெட் ல ஊழல், தடகள போட்டிகளில் ஊழல் ( காமண் விலத் போட்டி) , வீடு கட்டினா ஊழல் ( அதர்ஸ் வீடு வசதி ) , பாலம் கட்டின ஊழல், வெள்ள நிவரனத்து, சுடுகாட்டு கூரை வரைக்கும் ஊழல் நிறைந்த நாடாக் இந்திய இன்று இருக்கிறது. மிகவும் வேதனை பட வேண்டிய நேரம்.
இந்தியா பற்று விக்கிபீடியா வில் படித்தால்
" Since the introduction of market-based economic reforms in 1991, India has become one of the fastest growing major economies in the world;[20] however, the country continues to face several poverty, illiteracy, corruption and public health related challenges"
ஏழ்மையை ஒழிக்க தான் அரசாங்கம் இருக்கிறது என்று நினைத்தால், அந்த அரசாங்கம் தான் ஊழல் செய்கிறது. இதை இப்படியேவிட்டால் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஊழல் செய்தால் என்ன செய்ய முடியும், நம்ம வேற நாட்டுக்கு சென்று விடலாம் , நல்ல வாழ்கை வாழலாம் என்ற அவர்களது எண்ணத்தை ஒழிக்க வேண்டும். மிக கடுமையான தண்டனை தர வேண்டும், அவர்களுக்கு உரிமை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இப்போது தான் புதிதாக தொடங்க பட்ட மாநிலம் ஜார்கண்ட் அங்கேயே ஒரு முதல்வர் 500 கோடி அடித்தார் என்றால் , தமிழ்நாடு பல வருடமாக இருக்கிறது , இங்கு பல பேர் , பல முறை முதல்வராக இருந்து உள்ளனர் என்றால் யோசித்து பாருங்கள்.
போன வாரம்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தார். அவர் அவரது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினர், பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. நம்ம நாட்ல பிரதமரோ அல்லது எதாவது ஒரு முதல்வர் நடனம் ஆடும வயதில் இருகிறாரா ? இன்னுமும் தள்ளு வண்டியில் வந்து நாட்டை காப்பாற்ற தான் வேண்டுமா ?
அமெரிக்க பிரதமர் ( அமெரிக்க ல பிரதமர் இல்லை என்று சொல்லாதிங்க ) , இங்கிலாந்து பிரதமர், மற்றும் இந்தியா பிரதமர் கடவுளிடம் சென்று எங்கள் நாடு எப்போது முன்னேறும் என்று கேட்டார்கள் .. இந்த நகைச்சுவையை அனைவரும் படித்து இருப்போம் அல்லது கேட்டு சிரித்து இருப்போம். சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் செய்ய வேண்டும், அதை கேட்கையில் எண் மணம் வேதனைபடுகிறது.
இனியாவது இருந்துங்கள் மக்களே.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
0 comments:
Post a Comment