Monday, March 14, 2011

இந்தியாவும் உலககோப்பையும்

நான் இப்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பது இல்லை. எனக்கு கிரிக்கெட் பிடிக்காது என்று இல்லை. அதன் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. IPL தொடங்கிய உடன் இருந்த கொஞ்ச ஆர்வமும் போய் விட்டது.

அதற்கான காரணங்கள்
1.இப்போது நான் விளையாடுவது இல்லை.
2.பிசிசிஐ பணம் செய்யும் வித்தையை விட்டு நாட்டிற்கு என்று விளையாட வேண்டும்.
3.சூதாட்டம்
4.இந்தியா நன்றாக விளையாடுவது இல்லை.( பில்டிங் மற்றும் பந்து வீச்சு )
5.கங்குலி, அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றது.

கிட்ட தட்ட 16 வருடங்களாக நான் கிரிக்கெட் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் எனக்கு இந்த விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தில் யார் விளையாடினாலும் பார்பேன். உதாரணமாக பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியை ஒரு பந்து விடாமல் பார்த்தேன். ராவல்பிண்டியில் நடந்த அந்த போட்டியில் மார்க் டய்லோர் 331 அடித்து .. இன்னும் ஒரு ரன் அடித்தால் பிரட்மண் அதிக ரன் சாதனையை சமன் செய்யலாம். அப்போது அவர் எங்க கடவுள் போல, 1 ரன் அடித்தால் கடவுளுக்கும் எனக்கும் என்ன வித்யாசம் என்று ஆட்டத்தை முடித்து கொள்வார்.

சரி நம்ம நாட்டுக்கு வருவோம். இந்திய தென் ஆபிரிக்கா உடனான ஆட்டத்தை இழந்தது. இதற்க்கு காரணம் இந்தியாவில் சரியான பந்து வீச்சாளர் இல்லை என்பது தான். இது பல வருடங்கள இந்தியாவில் உள்ள பிரச்சனை. மட்டை தட்டுவதில் மிக சிறந்த வீரர்கள் சச்சின், கங்குலி, டிராவிட் என்று பலர் இருந்தாலும். ஒரு நல்ல பந்து வீச்சாளர் இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம்.
இந்தியா 500 ரன்கள் கூட எடுக்க கூடிய வல்லமை நம்மிடம் உண்டு. அதே நேரம் எதிர் அணி நமது பந்து வீச்சில் அதே 500 அடிக்க முடிகிறது என்றால் அதற்க்கு காரணம் நமது பந்து வீச்சின் தரம்.

இதே நமது பக்கத்து நாடு பாகிஸ்தானை எடுத்து கொள்வோம், அவர்களது பந்து வீச்சு எப்போதுமே அபாரமானது. வாசிம் அகரம், வாகர் யூனிஸ், ஷோயப் அக்தர் , உமர குள் என்று பலர் வந்து கொண்டே இருகின்றனர்.

நமது பந்து வீச்சை சரி செய்யாத வரையில் இந்தியாவுக்கு கோப்பையையும் கைபற்ற எந்த தகுதியும் இல்லை என்பதை நாம் மனதில் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நல்ல பந்து வீச்சாளர் யூசுப் பதான் தேர்வு செய்யபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஹட்ட் தரிக் எடுத்த வீரர் அவர். நல்ல ஆல்ரவுண்டுரர்ம் கூட.

இந்த உலக கோப்பை மட்டும் இல்லை இன்னும் எவ்ளோ உலக கோப்பை வந்தாலும் நம்மால் வாங்க முடியாது. ( படிக்காத ஒருவன் பரீட்சைக்கு சென்று முதல் மதிப்பெண் எடுப்பது போன்று நாம் உலக கோப்பை வாங்குவது )

Friday, March 11, 2011

ஜப்பானில் சுனாமி

2006 இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவுகள் இன்னும் மனதில் நீக இடம் கொண்ட நேரத்தில் ஜப்பானில் சுனாமி.

ஜப்பானில் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 8.6.
2006 இல் வந்த சுனாமியின் அளவு 7.7 ஆகும். சென்ற முறை இந்தோனேசிய அருகில் மாயம் கொண்ட பூகம்பம். இந்த முறை ஜப்பான் அருகில் மையம் கொண்டது.


கூகிள் நிறுவனம் சில உதவிகளை செய்துள்ளது. சுனாமி எங்கு தாக்கும் அதன் விவரங்கள் எல்லாம் தந்துள்ளது. கூகுளில் சென்று ஜப்பான் சுனாமி என்று டைப் செய்தாலே இதை எல்லாம் சொல்லுகிறது. அதே போல காணமல் போனவர்களை பற்றியும் ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது.

Wednesday, March 9, 2011

மதுரை 1945

1945இல் மதுரை எடுத்த அரிய வீடியோ ஒன்று அண்மையில் கண்டேன். இதோ உங்களுக்காக
உற்று பார்த்தல் மதுரைக்கு அன்றைக்கும் இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. மதுரையில் மட்டுமே இதை காண முடியும். மதுரை கலாச்சாரத்திற்கும் பன்படுக்கும் பெயர் போனது.
மன்றம் வைத்து தமிழ் வளர்த்தனர்.

Friday, January 7, 2011

எனக்கு இந்த அன்னை பூமி போதும் !!!

புது வருட வாழ்த்துக்கள் !!!

இது தமிழ் புத்தாண்டு இல்லை. ஆங்கில புத்தாண்டு. இருப்பினும் புது வருட வாழ்த்துக்கள் ( புத்தாண்டு என்று தமிழ் புத்தாண்டை சொல்வதுண்டு அதலால் .. புது வருடம்.)

இந்த புது வருட கொண்டாட்டங்கள் நடப்பது உண்டு. நான் இதற்கு செல்வது கிடையாது இருப்பினும் ஒரு முறை என்ன தான் இருக்கிறது பார்போம் என்று சென்ற கதையை இங்கு சொல்கிறேன். இந்த கதையில் வரும் அனைத்தும் உண்மையே. கற்பனை அல்ல.

2008 புது வருட கொண்டாட்டம். நான் அப்போது சென்னையில் இருந்தேன். நான் அங்கு ஒரு மேன்போரும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அடுத்த வருடம் இங்கு இருக்க போவது இல்லை என்ற நிலையில் இந்த புது வருட கொண்டாட்டம் நன்கு அமைய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன். எனது நண்பர் ஒருவர் அப்போது சிங்கப்பூரில் இருந்து வேற வந்து இருந்தார். அவர் அவரது நண்பர்களோடு ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல போவதாக கூறினர்.நானும் வரேன் என்று சொல்லி அவருடன் சேர்ந்தேன். அதுக்கு 750 ரூபாய் செலவு ஆகும் என்று கூறினர் பரவா இல்லை பாத்துக்கலாம் என்று சொல்லி சம்மதித்தேன். டிக்கெட் கிடைப்பதே அரிது பார்போம் என்றனர். நானும் எப்படியாவது போய் விட வேண்டும் என்று விரும்பினேன்.

அம்பச்சடோர் பல்லவா என்று ஒரு ஹோட்டல் முடிவு செய்தனர். அங்கு ஒரு பாஷின் ஷோ வேற இருப்பதாக கூறினர் நண்பர். ஒரே மகிழ்ச்சியில் சாயந்தரம் 6 மணிக்கே வேளச்சேரியில் இருக்கும் எங்கள் வீட்டில் இருந்து வண்டியில் புறப்பட்டு சென்றோம் சென்றோம் 7 30 மணிக்கு தான் அங்கு சென்று அடைந்தோம். அட ரொம்ப நேரம் ஆச்சு . எல்லாம் முடிஞ்சி போய் இருக்கும் என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே வெகு சிலரே இருந்தனர். நமது நண்பர்கள் இருந்தார்கள் என்ன என்று விசாரித்தால் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றனர். ஒரே சந்தோசம் நம்ம எதையும் தவறவில்லை என்று நினைத்து கொண்டோம்.

நேரம் போக போக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ( ஆண்கள் ) வந்தனர். சரி பேஷன் ஷோ அரம்பிக்கட்டம் என்று இருந்தோம். ஆரம்பித்தது அதுவுமே சரி இல்லை. ஏன்டா வந்தோம் என்று ஆனது.இரவு உணவு உண்டு என்று வேற கூறினர் அதனால் பொறுமையாக இருந்தோம். உணவு இடைவேளி வந்தது வெறும் ஒரு சமோசா மற்றும் பெப்சி கொடுத்தனர். அசைவ பிரியர்களுக்கு இதோ இருந்தது. நான் சைவம் என்பதால் அதுவும் போச்சு. பின்னர் உள்ளே வந்தோம், பாடல்கள் போட்டு நடனம் ஆட கூறினர். நம் மக்கள் எல்லாம் சும்மா நின்று கொண்டு இருந்தோம். பிறகு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து வெளியே போய் விடலாம் என்று முடிவெடுத்து நண்பர்களிடம் கூறினேன். எல்லாரும் ஒருமித்த கருத்தாக போகலாம் என்று கூறினர் என்று பார்த்து கொள்ளுங்கள் எவ்ளோ மோசம் என்று. நண்பன் ஒருவன் கூறினான் மெரினா கடற்கரை கூட நன்காக இருக்கும் அங்கு போகலாம் என்று சொன்னான்.

சரி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் இங்கு இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து எல்லாரும் கிளம்பினோம். நான் வண்டியில் வந்து இருந்தேன் , மற்ற நண்பர்கள் காரில் வந்து இருந்தனர். அவர்கள் புறப்பட்டு சென்றனர் நான் அவர்களை பின் தொடர்ந்தேன் ஒரு இரண்டு அடி சென்ற பின் எனது பின் சக்கரம் பஞ்ச்ர். கிழே இறங்கி நின்று பார்த்தால் புத்தாண்டு பிறந்தது எல்லாரும் வாகனத்தில் படு வேகமாக சென்றனர். நான் நடு தெருவில் வண்டி பஞ்சர் ஆகி நின்று கொண்டு இருந்தேன். பின்பு மவுண்ட் ரோட்டில் ஒரு கடையில் பஞ்சர் சரி செய்து ( அதற்கு சுமார் 500 ரூபாய் செலவு செய்தேன்..) இரவு 2 மணிக்கு பஞ்சர் பார்த்ததே பெரிய விஷயம். பேரம் பேசினேன் முடியாது என்று சொல்லி விட்டனர் வேறு வழி இன்றி சரி செய்து வீட்டுக்கு வரும் வழியில் போலீஸ் பிடித்து எதோ அவர்கள் பங்குக்கு எதோ என்னிடம் வாங்கினர். பிறகு வீடு வந்து சேரும் போது மணி அதிகாலை 4:15 இருக்கும்.

கிட்டத்தட்ட 1500 ரூபாய் வரையில் செலவு செய்து அலைந்தது தான் மிச்சம். உருப்படியாக ஒன்னும் நடக்கவில்லை.