Tuesday, November 23, 2010

நந்தலாலா - இது ஒரு மிஷ்கின் படம்

நந்தலாலா ... இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவர வேண்டிய திரைப்படம். இப்போது தான் திரைக்கு வருகிறது. மிஷ்கின் மிக நல்ல டைரக்டர் என்று சொல்லுவதற்கு முன் .. அவர் எடுத்த இரண்டு படம் மிக பெரிய ஹிட .. முதல் படம் சித்திரம் பேசுதடி. இரண்டவது அஞ்சாதே .. அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு மிக அருமையாக இருக்கும். இளையராஜா இசை வேற.. திரை அரங்கம் வந்து படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படம்.
சென்ற வாரம் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினர். உதவி இயக்குனரை பற்றி தவறாக பேசினார் என்பது தான். ஏற்கனவே கேபிள் சங்கர் சொன்னது போல அவர் சொன்னதில் தப்பு இல்லை, சொன்ன விடம் தான் தவறு.

மிஷ்கின் பற்றி சிறு செய்திகள் .
இயக்குனர் அவதற்கு முன் 72 வேலை செய்துள்ளார்.
கடைசியாக லேண்ட்மார்க் - புத்தக கடையில் வேலை பார்க்கும் பொது இயக்குனர் கதிர் ( அதாங்க நம்ம காதலர் தினம், காதல் தேசம படைப்பாளி ) கிட்ட நிறைய புத்தங்களை எடுத்து கொடுத்து , இது படிங்க அது படிங்க என்று சொல்லி, அப்புறம் உதவி இயக்குனராக பணிக்கு சேர்ந்தார்.
புத்தகம் படிக்கும் ஆர்வலர். நாவல் படிப்பது போன்று இவரது படங்கள் இருக்கும்.
வாழ்வில் நெளிவு சுழிவு பார்த்தவர். பேச்சு மிக ஜாஸ்தி , மத்தபடி அவரிடம் சரக்கு இருக்கிறது.
உதவி இயக்குனராக ஒரு திருநங்கை சேர்த்து உள்ளார் என்பது ஒரு கொசுறு தகவல். உலக தரத்துக்கு படத்தை கொடுக்க வல்லவர்.
கதிர்டம் வேலை செய்யும் போது தான் கானா உலகநாதன் அங்கு கதிரிடம் வாய்ப்பு கேட்டு பாடி இருக்கிறார். அவரை சித்திரம் பெசுதடியில் உபயோக படுத்தி இருப்பார்.
அவரே வருத்த பட்டு கூறிய விஷயம் - " என்னை குத்து பாட்டு ச்பெசியாளிஸ்ட் என்று சொல்லி விட்டனர் " காரணம் வாழமீனு மற்றும் கத்தால கண்ணால பாடல்கள் தான்.
அஞ்சாதே படம் டைட்டில் போடும் அழகே தனி .. அதை பார்த்தே நான் இவரது ரசிகன் ஆனேன்.

0 comments:

Post a Comment