Wednesday, October 20, 2010

விளம்பர இடைவேளிக்கு பிறகு தொடரும் ..

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைகாட்சி பார்க்க நேர்ந்தது. அரை மணி நேரம் கூட பார்க்கவில்லை அதற்குள் ஒரு 30 விளம்பரம்.  இது தீபாவளி நேரம் வேற .. ஒரே விளம்பரம் தான்

 அந்த எல்லா விளம்பரத்திலும் ஒரு சினிமா நட்சத்திரம். இதோ அந்த லிஸ்ட்


ஆச்சி மசாலா - தேவயாணி
ஆலுக்காஸ் - மாதவன் , விஜய்,சரத்குமார் ( தனி தனியே தான்.. இன்னும் சேர்ந்து வர மாதிரி எடுத்த ஒரு நிறுவனம் சரவணா மட்டுமே )
வீராஸ் - வ.பேட்டை - பாக்யராஜ்
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை  - ராதிகா
அக்சர் பெயிண்ட் - சந்தானம்
அல்ட்ர க்ரிண்டர்  - தேவயாணி
சென்னை சில்க்ஸ் - அனுஷ்கா
சரவணா ஸ்டோர்ஸ் - சூரியா
ஜெயச்சந்திரன் - சாயா சிங் , பூர்ணா ஸ்ரீ
எதோ ஒரு நகை கடை விளமபரம் - பத்மா பிரியா
போதிஸ் - நயன்தாரா
சாரதி வேஷ்டி - பிரசன்னா
கல்யாண சாரீஸ் - ஸ்ரேயா
தங்க மயில் - நதியா
ஸ்ரீ தேவி டேக்ஸ்டிலே - பாவனா
யுனிவர்சல் மொபைல் - மாதவன் 

இப்படி ஒரே சினிமாகரங்களா வரங்க. ஒரு விளம்பரம் எதுக்கு அவங்க பொருள் நல்லா இருக்கு நு விளம்பரபடுத்த. சினிமா கரங்க நிறைய வருவதினால் பொருள் மீது போக வேண்டிய கவனம் அவர்கள் மீது போகிறது.  Branding , Star value  எல்லாம் ஒகே . ஆனால் இங்கே அதன் முக்கிய காரணத்தை தவற விட்டார்களோ  என்ற ஒரு எண்ணம்.
இன்றைய உலகத்தில் விளம்பரம் முக்கியம் தான் அதே சமயம் ஒரு தரம் குறைந்த பொருள் பெரிய நடிகர் மூலம் விளம்பரம் செய்து விற்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நடிகர் பல விளம்பரத்தில் வந்தால் ரசிகர்கள் குழப்பம் ஏற்படும். ஒரு காலத்தில் விளம்பரத்திற்காக நான் டிவி பார்ப்பது உண்டு ஆனால் இன்று அது அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்ற போக்கில் போய் கொண்டு இருக்கிறது . விளம்பரம் செய்து விற்பனை கூட்டினார்களோ இல்லையோ ஆனால் போட்டி காரணமாக அதை செய்ய வேண்டி உள்ளது . கடைசியில் லாபம் யாருக்கு டிவி உரிமையாளர்க்கு  தான். யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.

நல்லா விளம்பரம் என்பது எப்பவுமே போட்டலும்  பார்க்கலாம் அந்த மாதிரி எடுக்கணும். இதோ ஒரு பொங்கல் ஆசியன் பெயிண்ட் விளம்பரம்.
இந்த விஜய் விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன் ...பார்த்து ரொம்ப  பீலிங் .. எப்படி எல்லாம் விளம்பரம் எடுக்குக்ரங்கா நு தான் .. இது என்ன படமா ??ராஜீவ் மேனன் இருந்த நேரம் மிக அருமையாக இருக்கும்.தற்போது அதன் தரம் குறைந்து விட்டது என்பது தான் எனது வாதம்.
ஒரு நடிகரை வைத்து விளம்பரம் எடுப்பது என்பது படம் எடுப்பதற்கு சமம. அவர் நல்லா மவுசு இருந்தால் நன்றாக வரும் , அவர் சரி இல்லை என்றால் இவர்கள் விளம்பரம் , வர்த்தகம் எல்லாம் பாதிக்கும். சக்தி ஊறுகாய் மற்றும் ராஜ்மஹால் விளம்பரம் இங்கே சொல்ல வேண்டும் அவர்கள் தமன்னாவை வைத்து முன்பே விளம்பரம் எடுத்தார்கள்அப்போது அவர் சினிமாவில் இல்லை , இப்போது மிக பெரிய நடிகை.


விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , தற்போது இந்த விளம்பரம் பார்க்க நேரிட்டது . மிக அருமை , அற்புதம்.இதை இரண்டு பாகமாக எடுத்து உள்ளனர். கடைசியில் சேர்த்தார்களா இல்லையா என்பது எடுத்த பாகம் ? அதை யாராவது பார்த்தல் எனக்கு சொல்லுங்களேன்.

2 comments:

philosophy prabhakaran said...

உங்க வீட்ல ரிமோட் ரிப்பேர் ஆகிவிட்டதா... சேனல் மாற்றாமல் இத்தனை அக்கப்போரையும் பார்த்திருக்கிறீர்களே...

மதுரைவீரன் said...

விளம்பரத்தை கூட கலை கண்ணோட பார்ப்பேன். ஆனால் என்னாலே முடியல .. பாவம் மக்கள் ..

Post a Comment