Tuesday, June 29, 2010

..

மதுரை முன்னேறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் நாம் போக போக பார்போம்.
தொடர்ந்து பதிவு செய்ய முயற்சி மேற்கொள்கிறேன்.

மதுரையில் எதிர் கட்சி தலைவர் சாலை முத்து சஸ்பெண்ட செய்ய பட்டுள்ளதாக செய்தி வந்து உள்ளது ( காரணம் என்னவாக இருக்கும், ஆளும்கட்சி தலைவரை தகாத வார்த்தைகளில் திட்டிடாராம் ..)

மத்தபடி டி வீ எஸ் நகரில் ராமர் கோவில் அருகே பல வருடங்களாக ஒரு விளையாட்டு திடல் இருந்தது. அதை சென்ற வாரம் ஒரு பூங்காவாக அண்ணன் அழகிரி மத்திடாராம்.

சினிமா செய்திகள்.

ராவணன் படம் பாத்தேன். - படம் ஆரம்பிக்கும் போதே போட்டுட்டாங்க .. இது மணிரத்னம் படைப்பு ( A maniratnam Film ).. அவர் எப்படி எடுபரோ..அதே போல் இருந்தது.அவர பாத்து இன்று பல பேர் காப்பி அடிச்சி வந்துட்டாங்க. அதனால அவர் எப்பவும் வித்யாசமான படம் கொடுப்பர். இதுவும் அதே போல.

எனக்கு படம் பிடித்து இருந்தது.
நல்ல படம். நல்ல உழைப்பு. வீண் போகாது.

தல அஜித் மீண்டும் அப்பாவாக போறாராம்.

அவ்ளோ தான்.
எழுத நிறைய இருக்கிறது.
நாளை எழுதுகிறேன்.

Saturday, June 26, 2010

மதுரை முன்னேறாமல் இருப்பது ஏன் ?

மதுரை தமிழகத்தில் ஒரு காலத்தில் மிக பெரிய நகரம், மாவட்டம் என்ற எல்லா சிறப்பும் இதற்க்கு உண்டு. ஆனால் இன்றோ மதுரை மாவட்டத்தை பிரித்து தேனி , விருதுநகர் போன்ற புதிய மாவட்டங்கள் உருவாக்கபட்டன.

மதுரை தொன்று தொட்டு வரும் ஒரு நகரம். மதுரையை சேர்த்தவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் உள்ளனர். தாங்கள் மதுரை மக்கள் சொல்ல்வதில் மிகவும் பெருமை படுகின்றனர்.

மதுரையில் போதிய வளர்ச்சி இல்லாது ஏன் ?

மதுரையில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.

மதுரையில் சொல்லும்படியான பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. ஒரு தொழிற்சாலையினால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பலபேர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி உண்டு.

கடந்த ஐந்து வருடங்களில் புதிய தொழில் எதுவும் துவங்கவில்லை.

மதுரையில் (IT Park ) தகவல் தொழில் நுட்ப பூங்கா வருகிறது , வருகிறது என்று கூறி ( ரியல் எஸ்டேட் ) நில விலை ஏறியதே மிச்சம்.

ஆனால் மதுரை தவிர நகரங்களான கோவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு இதனால் நல்ல பணம் புழங்கும் நகரமாக மாறி வருகிறது.

மதுரை முன்னேறாமல் இருப்பது எதனால் ?
இதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல்வாதிகள் ( வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றியது இல்லை. அண்ணன் அழகிரி வந்துட்டாரு . மத்திய அமைச்சர் ஆயிட்டாரு மதுரைக்கு எதாவது செய்வாருன்னு பார்த்தல். அவர் பாராளுமன்றம் சென்றே நீண்ட நாட்கள் ஆச்சுன்னு செய்தி வெளியாகுது.

மக்களே நீங்களே சிந்தியிங்கள் .

நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே கூறவும் . நம்மால் முடிந்தது எதாவது செய்வோம்.

Wednesday, June 9, 2010

சினிமா உலகம் 2

ஒரு இயன்குனர்க்கும் தயாரிப்பாளர்க்கும் இருக்க வேண்டிய பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி பார்த்தோம். இதில்இயக்குனர் பற்றி பார்போம்.

ஒருவன் ஒருவன் முதலாளி ... என்பது போல... தயாரிப்பாளர் தான் முதலாளி .
 மற்றவர் எல்லாம் தொழிலாளி ..

ஒரு இயக்குனர் தான் கதையின் நாயகன். (நிறுவனத்தின் முதன்மை அதிகாரி போல  )
அவர் இல்லையேன் படம் இல்லை. எதுவுமே இல்லை.
சொல்ல போனால் ஒரு இயக்குனர் க்கு தான் கட் அவுட் விக்க வேண்டுமே தவிர நடிகருக்கு அல்ல. ரஜினி கமல் போன்ற நடிகர்கள் நீண்ட நாட்களாக நடித்து தன்னை நிருபித்து உள்ளனர் . அவர்களை தவிர வேற யாருக்கும் முக்கியத்துவம் தருவது முறை ஆகாது.

ஒரு இயக்குனர் தான் கதையை முடிவு செய்கிறார்.
இதை படம் எடுத்தல் மக்கள் ஏற்றுகொள்வர்களா ??
இந்த கதையினால் நாளை என்ன நடக்கும் ?
யாருடைய மணம் புண்படாமல் எடுக்க வேண்டும்.?
தயாரிப்பாளர்க்கு நல்லா பலனை தர வேண்டும் (லாபம்).
மக்கள் விரும்பும் வண்ணம் படத்தை எடுக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்ய வேண்டும்
அதில் வரிகள் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
அதில் நடிக்கின்ற நடிகருக்கு, அனைத்து கலைஞர்களுக்கு  நல்லா எதிர்காலம் ( விருது ) கிடைக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
முக்கியமான ஒன்று படம் பார்க்க வருபவர்கள் முகம் சுழிக்க கூடாது. (முக்கியமாக தலைவலி வர கூடாது ) அப்படி இருந்தாலே படம் பாதி வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.
கலாச்சாரத்தை போற்றாமல் இருந்தால் கூட  பரவ இல்லை- கலாச்சார சீர்கழிவி இருக்க வேண்டாம்.




படத்தில் புதிதாக என்ன செய்கிறோம் என்பது இன்றைய முக்கிய கேள்வி.

இதற்கு தான் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்து மணி கணக்கில் பேசி மக்கள் அனைவரையும் திரை அரங்கத்திற்கு இழுக்கின்றனர். இதில் புதுசா இது பண்ணி இருக்கோம், அது பண்ணி இருகிறோம். இது மக்களை முட்டாளாக்க எடுக்கபடும் முயற்சிகள். இது மார்க்கெட்டிங் தந்திரம் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதுவே அவர்களது தோல்விக்கு வழி வகுத்து விடுகிறது.

ஒரு நல்லா படத்திற்கு விளம்பரம் தேவை இல்லை. ( ஒரு 30 நிமிஷத்துக்கு ஒரு முறை தங்களது தொலைகாட்சியில் விளம்பரம் செய்வது அவசியம் இல்லாத ஒன்று )

இதோ ஒரு உதாரணம். விளம்பரம் ஒரு பக்கம் ( தனக்கு சாதகமான முறையில் ) ஆனால் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.



Tuesday, June 8, 2010

சினிமா உலகம் 1

ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர்கள் யார் யார் என்று ஏற்கனேவே பார்த்தோம்.

இதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றி பார்போம்.

ஒரு திரைப்படம் வெற்றியடைய பல காரணம் உண்டு. அதன வெற்றி மற்றும் தோல்விக்கான அதிக பொறுப்பு ஒரு இயன்குனரையே சேரும்.

வெற்றி பெற்றால் அது நடிகரன் படம் என்றும் . வெற்றி பெற வில்லை என்றால் இயக்குனர் சரி இல்லை என்றும் சொல்ல கூடாது.

ஒரு நடிகன் என்பவன் இயக்குனர் சொல்லவதை கேட்டு அவர் விரும்பும் வண்ணம் படத்தை உருவாக்க உதவி செய்பவர்களில் ஒருவன். திரைபடத்தின் பின்னால் உழைப்பவர்கள் பல பேர் இருந்தும் நடிகற்கே அதிக சம்பளம்  என்பது வேதனைக்குரிய விஷயம்.

ஒரு இயங்குனர் தனது ஆற்றலளால் ஒரு படத்தின் கதையை உருவாக்குகிறார். அதற்கு திரைகதை அமைக்கிறார். அதை தயாரிக்க பணம் நிறைய தேவைப்படுகிறது. அப்போது தான் ஒரு தயாரிப்பாளரிடம்  கதை சொல்லுகிறார். அவர் இந்த படத்தில் தனது  பணத்தை முதலீடு செய்கிறார்.
இயக்குனர்க்கு இதனால் அதிக சம்பளம். அவருக்கு பொறுப்புகளும் அதிகம்.
அவர் எண்ணுவது போன்று படம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தயாரிப்பாளரிடம் நல்ல ஒத்துழைப்பு வேண்டும்.

ஒரு இயக்குனர் தான் நினைப்பது போன்று படம் எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு நல்லா கதை இருந்தாலும் அதை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வர வேண்டும். இது ஒரு வியாபாரம் ஆகிவிட்ட காரணத்தினால் தயாரிப்பாளர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பது எப்படி என்று தான் பார்க்கின்றனர். இதனால் இயக்குனர் தான் நினைப்பது போன்று ஒரு காட்சி படமாக்கவோ அல்லது மிகுந்த பொருட்செலவில் ஒரு காட்சி அமைப்பது சில சமயம் நடக்காமல் போய் விடுகிறது.

நாம் பல படங்களின் பூஜை பார்த்து இருப்போம். அதில் சில படங்கள் பாதியில் நின்று போய் இருக்கும். ஏன் என்று கேட்டல் தயாரிப்பாளர்ரிடம் பணம் இல்லை. இயக்குனர் விலகி விட்டார்  என்று பல செய்திகள் அடி படும்.

இதனால் தான் இன்று பல பெரிய இயக்குனர்கள்  தாங்களே ஒரு தயாரிப்பாளர் ஆகிஉள்ளனர். உதாரணத்திற்கு திரு. மணிரத்னம் அவர்கள் எடுத்த எல்லா படங்களுமே அவர் அண்ணன் ஜீ. வெங்கடேசன் அல்லது அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தான் தயாரிக்கும். ஏன் என்றால் ஒரு படம் நல்லா முறையில்  இயக்குனர் நினைத்தது போன்று படம் செய்ய ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு நல்லா தயாரிப்பாளர் என்பதை விட நல்ல பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவரது பணத்தில் ஆட்டம் போடும் எல்லாத்தையும் பார்த்து, அவர் பொறுமை காப்பது மிக மிக அவசியம்.

ஒரு இயக்குனர் முதல் படம் இயக்க ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது மிக மிக கடினம். எல்லா பெரிய இயக்குனர்களும் அவர்களது வாழ்கையை பற்றி சொல்லும் போதும் இதை பற்றி கண்டிப்பாக சொல்லுவார்கள். என் என்றால் இது அவ்ளோ லேசு பட்ட காரியம்அல்ல.

ஒரு வாய்ப்பு கிடைப்பது ( என்பது தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்ல ) என்பது மிக மிக கடினம். அதிலும் அந்த தயாரிப்பாளர் கேட்ட பிறகு  கதையில் தலையிடலாம் இருப்பது அதை விட மிக கடினம்.

இதனாலே பல பிரச்சனைகள் உருவாகிறது. தனக்கு தெரிந்த நடிகர் அல்லது நடிகை தேர்வு செய்ய வேண்டும், கதை கொஞ்சம் மாற்ற வேண்டும், செலவு கொஞ்சம் குறைக்க வேண்டும். குறுகிய காலத்துள் முடிக்க வேண்டும்.
எப்படி பல பிரச்சனைகள் எழும்.

இதனாலே பல இயங்குனர்கள் தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல புதிய இயக்குனர்க்கு வாய்ப்புஅளிக்கின்றனர்.



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைபடத்தில் வரும்  ஒரு காட்சி. இதில் அஜித் ஒரு புதிய இயங்குனர் அவரோட உணர்ச்சிகளை  நீங்கள் காணலாம். ( எதோ நான் சொன்ன கதைக்கு ஒத்து வரும் சீன்)

இப்படிசினிமா பற்று எழுதினால் எழுதிகிட்டேபோகலாம் .
நிறைய இருக்கிறது... தொடரும்.

Monday, June 7, 2010

சினிமா உலகம்

சினிமா - இந்த மூன்று எழுத்து பலரது தூக்கங்களை கலைந்துள்ளது.
இந்த உலகத்தை ஆட்டி படைக்கிறது. சினிமா பார்க்காதவர்கள் மிக குறைவு.
எங்கோ நடப்பதை நமக்கு காட்டுகிறது. நமக்குள் நடப்பது போல் ஒரு உணர்வை  தூண்டுகிறது. நம்மில் ஒரு பாதிப்பை உண்டாக்கிறது.

இந்த சினிமாவில் நுழைந்து பெரிய நடிகன் , நடிகை, இயக்குனர், நடன இயக்குனர் ஆவதே பலரது லட்சியம். அதை ஊக்குவிப்பது போன்று இன்று பல நிகழ்ச்சிகள் வந்து உள்ளன .

1. ஏர்டெல் சூப்பர் சிங்கர்
2. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா
3. நாளைய இயக்குனர்

இது போல் அடுத்து வரும் காலங்களில் யார் அடுத்த விஜய், அஜித், சிம்பு , சிம்ரன், ஏ ர் ரஹ்மான் , இளையராஜா ,பி சி ஸ்ரீராம் , வாலி, வைரமுத்து, தோட்டாதரணி, சாபு சிரில், ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன் இப்படி போய் கிட்டே இருக்கும்.

ஏன் எப்படி ?
சினிமாவின் மீது காதல் கொண்டவர்கள் இந்த ஊரில் அதிகம்.
சினிமாவை வெறும் ஒரு ஊடகமாக பார்க்கலாம் அதை ஒரு மிக பெரிய பணம் செய்யும் வித்தை என்பதை பலரும் அறிவார்கள்.

ஒரு சினிமா என்பது பல ஆயிரகணக்கான மக்கள் உழைப்பில் , பல கோடி பேர் கண்டுகளிக்க கூடியது. இதில் யார் யார் உழைக்கிரார்கள். அதில்  அவர்களது பங்கு என்ன என்பதை பற்றி இங்கு பார்போம். இதில் உழைப்பவர்களுக்கு எல்லாம் தக்க சன்மானம் கிடைக்கிறதா ??


ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர் இயக்குனர்.
இயக்குனர்  - அந்த படத்தின் கதை, திரைக்கதை முடிவு செய்கிறார்.
        இவர் தலைமையில் உதவி இயக்குனர்கள் பணி செய்வர்.
ஒளிபதிவாளர் - அந்த படத்தை பதிவு செய்கிறார்.
        இவர் தலைமையில் உதவி ஒளிபதிவாளர் பணி செய்வர்.
இசை அமைப்பாளர் - பின்னணி இசை மற்றும் பாடல்கள்.
        இவர் கவிஞர்,பாடகர்கள்,இசை கருவி இயக்குபவர்கள் என்று பல பேர் கூட்டணியில் தான் பாடல்கள் உருவாகிறது.
 கலை இயங்குனர்
ஒலிப்பதிவாளர் 
 நடன ஆசிரியர்
சண்டை காட்சி அதற்கு ஒரு அமைப்பாளர்.
நடிகர் ,நடிகை , துணை நடிகர்கள் என்று பல பேர் உழைப்பில் உருவாவது தான் சினிமா.

இதை உருவாக்குவதில் ஒரு தயாரிப்பாளர் தனது பணத்தை முதலீடு செய்கிறார்.

தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் . அது தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடி மக்கள் பார்க்கின்றனர்.

எல்லாரும் படம் பார்ப்பது இல்லை. ஆனால் சிலர் ஒரு படத்தை நான்கு, ஐந்து முறை பார்பதினால். சராசரியாக அனைவரும் பார்கிறார்கள் என்று கணக்கிட்டு கொள்ளலாம்.

ஒரு சராசரி படம் ( பெரிய நடிகர் படம் இல்லை )
6 கோடி மக்கள்   10  ரூபாய் செலவு செய்து படம் பார்த்தல் = 60 கோடி ரூபாய்

இது டிக்கெட் வருமானம் மட்டுமே.
இதை தவிர இசை தட்டு விற்பனை, வெளிநாடு விற்பனை, இசை தட்டு வெளியுடு என்று ஒரு விழா நடத்தி அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு விற்பனை, மற்றும் தொலைகாட்சி உரிமம் , பாடல் உருமம் என்று பல வழிகளில் பணம் செய்ய படிக்கிறது.

இதில் ஒவ்வொரு துறை வரியாக பார்போம்.
தொடரும்.