Thursday, October 28, 2010

எந்திரன் - வியாபார விபரம்

எந்திரன் வெளிவந்து முதல் 3 வாரங்களில் இந்தியாவின் அனைத்து வசூல் சாதனைகளை உடைத்து விட்டது என்பது பழைய செய்தி. எந்திரன் திரைப்படம் ஏன் எவ்ளோ மற்றும் எப்படி இவ்வளவு லாபம் வரும்அதை பற்றி பார்போம். முதல் மூன்று வாரங்களில் வசூல் மட்டும் 225 கோடி என்று சொல்லுகிறார்கள். படத்தின் மொத்தம் செலவு 150 கோடி என்றும் சொல்லி விட்டார்கள். எங்கே இப்பவே லாபம் பாத்தாச்சு. ஆனால் ரஜினி சொல்லுற மாதிரி "இனி தான் ஆரம்பம் " என்று கூட சொல்லலாம்.

சன் டிவி எப்படி ஓடுகிறது ? மெகா தொடர்கள், உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி போடும் திரைப்படங்களால் தான். எப்பவுமே சன் டிவி நல்லா படங்களை 10 கோடி முதல் 15 கோடி செலவு செய்து தயாரிப்பாளரிடம் வாங்கி கொள்ளும். அப்புறம் தீபாவளி நன்னாளில் இந்த படத்தை போட்டு அதில் வரும் விளம்பரத்தின்  மூலம் காசு பார்க்கும். நல்லா திரைப்படம் என்றால் முதல் முறையே அதிக விளம்பரம் வரும். அப்படியே அதில் நல்லா லாபம் , இது போக மறுமுறை ஒளிபரப்பும் போதும் விளம்பரம் வரும். இப்படி சன் டிவி ஒரு படத்தை வைத்து திரை கொண்டாட்டம் ,காமெடி டைம், புது பாடல்கள் , டாப் 10 பாடல்கள், டாப் 10  படங்கள் என்று பல ப்ரோக்ராம் தயார் செய்ய படுகிறது.

 இப்படி எப்பவுமே இன்னோருதனை (சினிமா காரனை) நம்பி தான் சன் டிவி ஓடுது . அதனால் ஏன் நம்மாலே படம் எடுக்க கூடாது என்று எடுக்க ஆரம்பித்த சன் டிவி. இதனால் அவர்கள் நடத்தும் 43 எப் எம் ரேடியோ, 2  தினசரி , 2 வார இதழ்கள் என்று எல்லாத்துக்கும் தீனி வழங்குகிறது. இது ஒரு வகையில் நல்ல மார்க்கெட்டிங் தந்திரமும் கூட .
எந்திரன்  பாடல் வெளியீடு -8 மணி நேரம்
எந்திரன் முன்னோட்டம் ( Trailer ) வெளியீட்டு விழா - 6 மணி நேரம்
வீடியோ பாடல் வெளியீடு ( இது யாரு கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல ) - 4 மணி நேரம்
எந்திரன் படம் எடுத்த விதம் ( Making of Endhiran சிவாஜி படத்துக்கு 5 நாள்.. தினமும் ஒரு மணி நேரம் போட்டாங்க .. இதுக்கு அத விட நிறைய நேரம் இருக்கும்) - 10 மணி நேரம்
100 நாள் விழா- 4 மணி நேரம்
500 நாள் விழா -  எப்படியும் ஒட்டிடுவங்க அதுக்கு ஒரு விழா - 8 மணி நேரம் 
உலகமெங்கும் எந்திரன் - 8 மணி நேரம்
இது எல்லாம் போக எந்திரன் படத்தை 2014 தீபாவளிக்கு போடுரப்ப இருக்கு பாருங்க விளம்பரம் .. 4 மணி நேரம்
இப்படி மொத்தமாக இவர்கள் 52 மணி நேரத்துக்கான சன் டிவி பிராய்ம் டைம் ( Prime Time )  அதிக TRP உள்ள ப்ரோக்ராம்களை ரெடி செய்து விட்டனர்.
ஒரு படத்தை விளம்பரத்தோட 3 மணி நேரம் சன் டிவி ஒளிபரப்பும். ( சில காட்சிகளை கத்தரித்து ) அப்படி பார்த்த எந்திரன் மூலம் திரை 17 படத்துக்கு இணையான வசூலை செய்து உள்ளனர் ( ஒரே ஒரு முதலீட்டில்) 17 * 3 = 51 மணி நேரம்.
ஒரு மணி நேரத்துக்கு சன் டிவியில் எவ்ளோ விளம்பரம் வரும் என்று யாராவது கணக்கிட்டு உள்ளார்களா ?
15 நிமிடத்துக்கு ஒரு 5 நிமிடம் என்று வைத்து கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் வரை விளம்பரம் போடா முடியும்.
15 * 20 லட்சம் ( ஒரு 30 வினாடி ஓடும விளம்பரம் 10 லட்சம் என்று கணக்கு .. இது கம்மி தான் .. ஒரு கணக்கு க்கு தான் ) = 300 லட்சம் = 3 கோடி .
52 மணி நேரம் *  3 கோடி  = 150 கோடி  ( வெறும் சன் டிவி மட்டும்)
திரை படம் 50 நாள் முடிவில் எப்படியும் 300 கோடி வசூலை தொட்டு விடும்.
டிவி வருமானம் - 150 கோடி ( சன் மட்டும் )
உசே , தேஜா , எப் எம் , பேப்பர் , நாளிதழ் இதர வருமானம் - 40 கோடி
ஆடியோ தகடு விற்பனை - 10 கோடி

அப்படி இப்படின்னு ஒரு 150 கோடி ரூபாய் முதலீட்டில் 500  கோடி வரை வியாபாரம் செய்து உள்ளனர்.  இதுக்கு நம்ம அண்ணே கேபிள் சங்கர் தான் பதில் சொல்லணும் ..இது சத்தியமா இல்லை இதை விட கூடவே வருமா ? இது வேற யாராலும் சத்தியம் இல்லை.  ஏவிஎம் கூட படம் எடுத்த இந்த அளவுக்கு அதை காசாக்கி இருக்க முடியாது.  இது போதாததுக்கு எந்திரன் படத்தில் ரஜினி உபயோகித்த உடைகளை ஏலம் விட போவதாக  கூட செய்திகள் வருது.
புதுமையாக எதாவது செய்யணும் என்றால் ... ஜுரச்சிக் பார்க் படத்துக்கு போட்ட செட் இன்னும் பத்திரமாக வைத்து அதுக்கு ஒரு நுழைவு கட்டணம் போட்டு கண்காட்சிக்கு வைத்து உள்ளனர். நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி செய்யலாம் ஆனால்இடம் தான் இல்லை.வெளிநாடுகளில் இந்த வசதி உண்டு.
எந்திரன் கதை என்னோடதுஎன்று கடந்த நாலு நாட்களாக செய்து வந்த வண்ணம் உள்ளது. சன் தரப்பில் அல்லது ஷங்கர் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணூம்... :)

கடைசில  காலியானது நம்ம பாக்கெட் தான் ....

9 comments:

ப.கந்தசாமி said...

கடைசில காலியானது நம்ம பாக்கெட் தான் ....

கரெக்ட்டுங்க

M S Sathish said...

கலாநிதி மாறன் போர்ப்ஸ் லிஸ்ட்ல மேல போனது தான் மிச்சம்.

Anonymous said...

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்

Unknown said...

உண்மை

Anonymous said...

ethuku sir ungalukku ivalavu gaandu.. ungala miratti padam paaaka vechakangala.. unga pocket la irunthu panatha avanga pudukanangalaa...??? inth mathri blog potta per vena kedaikum, , naadu urupadathu.,antha padathal mattum naadu urupadumnu sollala....aana unga intha Gaandu behaviour,,, sirippu than varuthu... ithuku supports ku aalunga vera... koduma sirrr . maranu avar business a correcta paakararu.

Unknown said...

படமே என்றதுன்னு ஒருத்தர் கேஸ் கொடுத்தாலும் அதை வாங்க ஆளில்லை...
படத்தின் உண்மையான ரிசல்ட்

http://theskystudios.blogspot.com/2010/10/blog-post.html

http://theskystudios.blogspot.com/2010/09/blog-post_1499.html

http://theskystudios.blogspot.com/2010/09/in.html

கந்தசாமி said...

அப்புறம்.. மாதா மாதாம் கேபிள் கட்டணம், டிஷ் கட்டணம்...

மதுரைவீரன் said...

திரு. DrPKandaswamyPhD ,திரு. M S Sathish , திரு. நா.மணிவண்ணன் ,திரு. normalann, திரு. ஆகாயமனிதன் மற்றும் திரு. கந்தசாமி அவர்களுக்கு எனது நன்றி.
திரு. normalann கூற்றுக்கு நான் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஹிட்ஸ் வர வேண்டும் என்பதற்கு எழுத வில்லை. எனது மனதில் எது சரி என்று பட்டதோ அதை தான் எழுதினேன். ஒரு குழந்தையை படி என்று சொல்லுகிறோம் , படிக்க வில்லை என்றால் மீண்டும் படி படி என்று சொல்கிறோம். அது குழந்தை நன்றாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான். அதற்காக குழந்தையை அடித்து படிக்க சொன்னால் அதில் யாருக்கும் நன்மை கிடையாது. குழந்தைக்கு ஒரு வெறுப்பு தான் வரும். அந்த கதை தான் இங்கு நடக்கிறது இதனால் நாளை மறுநாள் நடக்க விருக்கும் சங்கதியினை நினைத்து தான் வருத்த படவேண்டியுள்ளது.

Unknown said...

I thing this movie story and every thing is waste.. It is not possible for creating the robo. but our time and money wasted.. be aware tamil people..

Post a Comment