நாம் பெற்ற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில யோசனைகள் இதோ:
உந்துசக்தி உன்னிடமே உள்ளது. நீயேதான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்; பிறர் உனக்குத்தருவது ஊக்கம் மட்டும்தான்.
- உலகுக்கு நீ ஏன் வந்துள்ளாய் என்று உணர்ந்தால் உன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.
- சரியாகத் தோற்றமளிப்பது ஒன்று; சரியாக இருப்பது மற்றொன்று. இவற்றில் பின்னதையே தேர்வு செய்.
- நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், உனக்குள்ளே தனித்தன்மை கொண்ட பெரும் ஆற்றல் உள்ளது.
- கடும் உழைப்பு, ஒருவரது விருப்பமல்ல – அது ஒரு கட்டாயம்.
- நேர்மை – பேரம் பேசக்கூடியதோ அல்ல. நேர்மை மட்டும் இருந்துவிட்டால், யாவும் பின்தொடர்ந்து வரும்.
- எதை நினைக்கிறாயோ அதுவே உன் நடத்தை. எவ்வாறு நடந்துகொல்வாயோ, அதுவே உன் மரியாதை, மதிப்பு எல்லாம். அதனால் சிந்தனையைச் செம்மைப்படுத்து.
- உலகத்தின் விரிவான அமைப்பில் நீ ஒரு சிறு புள்ளி மட்டுமே. அதனால் அடக்கமாக இரு.
- ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய நுணுக்கத்தைக் கற்கவில்லை என்றால் வேலை செய்வதை நிறுத்து.
- தெளிவான பங்கேர்பைவிட தெளிவான இலக்கே மிக அவசியம்.
- தரம் என்பது ஒரு பிரிவல்ல, அது ஒரு வாழ்வு முறை.
- கூற நினைத்தால் கூறிவிடு. ஊமைபோல் நடிக்காதே. மோசமாகத் தோற்றுப்போகும் நிலை எப்போதும் வரவே வராது.
- இன்றைக்கு நீ யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா? இல்லை என்றால் இன்று நீ வாழவே இல்லை. பல உயிரற்றப் பொருள்களுடன் நீயும் ஒன்றாக இருந்திருக்கிறாய்.
- மகிழ்ச்சியை நீ தேடு, பணம் உன் பின்னே வரும். பணத்தைத் தேடினால் உன் பின்னால் மகிழ்ச்சி வராது!
- உன்னைக் கோபித்தார்களா, வியாபாரத்தில் நஷ்டமா, உறவு ஏதும் முறிந்துவிட்டதா – இது உன் நல்ல நேரம் – அதற்கு நன்றி சொல். இது உனக்கு நடந்த நல்ல நிகழ்வு.
- அடுத்த நிகழ்வைப் புதிதாகத் துவக்க ஒரு நல்ல வாய்ப்பு.
என்ன நடக்க வேண்டும என்று நீ நினைப்பது நடந்துவிட்டால் சந்தோஷம். நடக்க வேண்டும் என எண்ணியது நடக்கவில்லை எனில் இரட்டிப்பு மகிழ்ச்சி; கொண்டாடு. - பிறரை நீ ஈர்ப்பதற்கு உண்மையே பேசு.
கடவுள் உனக்கு வகுத்துள்ள திட்டத்தில் தவறு கிடையாது. பிரச்சனையைச் சந்தித்தால், அதன் தீர்வில் ஒரு பங்காக இருக்க முயற்சி செய். - உன் தொலைநோக்கு, இலக்கு, செயல்பாடு ஆகியவற்றில் உறுதியாக இரு.
- வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய நேரத்தில் வாழ்நாளுக்குள்லேயே பயன்படுத்த வேண்டும். ஆரப் போடாதே.
- நீ நீயாக இருப்பதற்காக, உன் பெற்றோர், ஆசிரியர், வழிகாட்டி அனைவருக்கும் நன்றி கூறு.
தமிழில்: பேராசிரியர் ஹரிஹரன்
நன்றி ராமகிருஷ்ண விஜயம்.
http://ramakrishnavijayam.com/?p=325