மதுரையில் அக்டோபர் 18 அன்று அ தி மு க நடத்தும் ஆர்பாட்டம் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி உள்ளது. முதலில் சென்ற மதம் நடப்பதாக இருந்தது. பின்னர் கொலை மிரட்டல் வந்ததை ஒட்டி தள்ளி வைக்கபட்டது. இப்போது தேதி நெருங்க நெருங்க போஸ்டர் கலாச்சாரத்துக்கு பெயர் போன மதுரை நகரில் மீண்டும் போஸ்டர் யுத்தம் துவங்கி உள்ளது.
அண்ணன் அழகிரி வாழ்க என்றும் ஜெயலலிதா வை எதிர்த்து தி மு க வினர் போஸ்டர் ஓட்டுகின்றனர். அதற்கு நேர் மாறாக அ தி மு க வினர் அழகிரி மற்றும் தி மு க அரசை எதிரித்து போஸ்டர் ஓட்டுகின்றனர். இருவருக்கும் உள்ள யுத்தம் நன்கு தெரிந்ததே இருபினும் போஸ்டர் மூலம் அதை வெளி காட்டுகின்றனர்.
இதோ சில போஸ்டர் உங்கள் பார்வைக்கு.
இவங்க creativity ஒரு அளவே இல்லாமல் போயவிட்டது. ஒபாமா வை கூட விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். இயக்குனர் ஷங்கர் கூட இவங்க கிட்ட வந்து ஐடியா கேக்கலாம். அந்த அளவுக்கு 11 பேர் கொண்ட குழு செயல் படுது.
அதிமுக போட்டோ முதல்ல போட்டேன் என்பதற்காக நான் அதிமுக இல்லை. அதே சமயம் நான் திமுக வும் இல்லை. ( கம்யூனிஸ்ட் ம் இல்லை )
நடோடிகளில் வருவது போன்ற 11 பேர் கொண்ட குழு செயல் படுகிறது என்று நினைக்குறேன்.
Box Office Report Aug5
6 days ago
4 comments:
அருமையான பதிவு நண்பரே... நான் நீண்ட நாட்களாக மனதிற்குள் வைத்திருந்த பதிவொன்றினை இட்டிருக்கிறீர்கள்... பிடல் காஸ்ட்ரோவுடன் ஜெயலலிதா இருக்கும் படம் உச்சகட்டம்...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரம் இன்று ப்ளெக்ஸ் போர்ட்களை வளர்த்து கொண்டு இருக்கிறது
யாருக்காவது பொளப்பு ந்டக்குது பாருங்க. இந்த போஸ்டர் காரவிங்க பொளச்சு போறாய்ங்க. :))
கர்மம். கர்மம்
நன்றி பிரபாகரன் , ராம்ஜி மற்றும் சுல்தான்.
இது ஒரு சின்ன சாம்பிள் தான் .. ஊரு முழுக்க இந்த மாதிரி தான் போஸ்டர், ப்ளெக்ஸ்
Post a Comment