நேற்று தான் எந்திரன் பார்க்க முடிந்தது. எனக்கு படம் சுமார் என்று தான் தோன்றியது. ஷங்கரின் மிக பெரிய ரசிகன் நான். இந்த படத்தில் அவர் உழைப்பு தெரிகிறது ஆனால் இந்தியன், முதல்வன் , அந்நியன், சிவாஜி , காதலன் படங்களை மக்களுக்கு காட்டிய ஷங்கர் தானா என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது .
ஷங்கர் திரைப்படங்களை பார்த்தால்
Gentleman - இது தான் அவரது முதல் படம் அதனால் இதில் அவர் விளையாட வில்லை. ஒரு நல்ல படம் , நன்கு ஓடியது . குஞ்சுமோன் தான் தயாரிப்பாளர்.
காதலன் - இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம் - நடனத்துக்கு முக்கியதுவம் கொடுத்த படம். இதில் முக்கால முக்கபுள்ள என்ற பாடல் இன்று கேட்டால் கூட பார்க்க துண்டும் அளவுக்கு நல்ல கிராபிக்ஸ் .
இந்தியன் - இங்கு தான் தனது முத்திரையை பதித்தார். மர்ம கலை என்பதை இவர் மூலமாகதான் மக்கள் அறிந்தனர். கமல், நல்ல தேசப்பற்று மிக்க கதை நல்ல பாடல்கள், என்று இந்த படத்தை எங்கோ தூக்கி சென்றது.
ஜீன்ஸ் - இந்த படம் பிரசாந்துக்கு வாழ்வு கொடுத்த படம் என்ற சொல்லலாம். அமெரிக்காவை கௌதம் மேனன்க்கு முன்னால் நன்றாக காட்டினர். உலக அழகி, உலக அதிசயம் என்று இந்த படத்தை 2 வருடம் எடுத்தார் . பாடல்கள் என்று கேட்டால், கூட இனிக்கும் அந்த அளவுக்கு நல்ல பாடல்கள்.
முதல்வன்- இந்த படம் ஒரு சாதாரண மனிதனை கூட சிந்திக்க வைத்த படம்.
அனைவரும் இந்த படத்தை பற்றி அறிந்ததே.
பாய்ஸ் - கொஞ்சம் சறுக்கிய படம். தொழில்நுட்ப வகையில் என்னை கவர்ந்த படம். நல்ல கேமரா , மோசன் பிரீஸ்
அந்நியன் - திரும்ப பழைய பார்முலா லஞ்சம, ஊழல் போன்றதை சொல்லிய படம். விடாது கருப்பு டிவி தொடர் கிளைமாக்ஸ் split பெர்சொனலிட்டி என்ற ஒரு கருத்தை படத்தில் காட்டினர்.
சிவாஜி - AVM ரஜினி ரஹ்மான என்று ஒரு பெரிய கூட்டணி . வெற்றியும் பெற்றது .அதற்கு மேல் இந்த படத்தில் எதுவுமே செய்ய முடியாது என்ற வரைக்கும் எடுத்த படம்.
இப்படிபட்ட இயக்குனர் இயக்கிய படம் எந்திரன். எந்திரன் Bicentennial man, Iron man, IRobo போன்ற படங்களின் சாயல் ரொம்ப இருந்தது. படத்தில் நேரிய விஷயங்களை சொல்ல ஷங்கர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் ஏனோ எனக்கு படம் ஒரு நிறைவை தரவில்லை. ரஜினியை வைத்து இவ்ளோ கஷ்ட பட்டு எடுத்த ஒரே இயக்குனர் இவராக தான் இருக்க முடியும்.
எல்லா படங்களுக்கும் 2 வருஷம் எடுத்த ஷங்கர் இந்த படத்தையும் 2 வருடம் எடுத்தது ஒரு ஆச்சிர்யம். இந்த படம் ஷங்கர் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்து இருந்தால் இன்னும் அருமையாக வந்து இருக்கும் என்பது எனது வாதம்.
பாடல்கள் மிக மோசமாக உள்ளது. அதற்கு செட் அந்த அளவுக்கு இல்லை. ஷங்கர் படம் என்றாலே செட் தான் ஞாபகம் வரும். சிவாஜி சகானால இருந்து ஆரம்பித்த இந்த பிரச்சனை, இதில் பாடல்களுக்கான செட் நன்றாக இல்லை, நேற்று வந்த சிம்பு படத்தில் கூட பாடல்களுக்கு நல்ல செட் உள்ளது.
கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி எதோ ஒன்றை ஒரு பாக்ஸ்இல் வைத்து அதை மூடி அப்புறம் ப்ரோக்ராம் செய்வர். அந்தபாக்ஸ் எங்க வீட்ல இருக்குற டேபிள் டிஜிட்டல் காலெண்டர் - அது வெறும் 75 ரூபா தான் பிளாட்பாரம் கடைகளில் கூட கிடைக்கிறது. இது தான் உங்கள் படமா ஷங்கர்.
அப்புறம் காதல் அணுக்கள் பாடலுக்கு லாங் சாட்ல இவங்க நடந்து வந்த கால சுவடுகள் தெரியும். அது நேரிய டைம் ப்ராக்டிஸ் பண்ணதுல நேரிய ஆயிடுச்சு. எப்பவுமே ஷங்கர் படத்தில் இதை கூட சரி செய்து தான் படம் எடுப்பார். எதோ இதை விட்டு விட்டார்.
இதுல சிட்டி ரோபோவ - அல்லது சூப்பர் மண் என்ற ஒரு சந்தேகம் வருது.
மேலை நாடுகளில் அவர்கள் இந்த மாதிரி படம் எடுத்தாலும் அதில் அவர்கள் இசாக் அசிமோவ் விதி என்று ஒன்று உள்ளது அதை தான் முதலில் சொல்லுவார்கள் ஆனால் இந்த படத்தில் அதை பத்தி எல்லாம் கவலையே படவில்லை ஷங்கர். மக்களுக்கு தெரியவா போகுது என்று கேட்டால். மக்களுக்கு தெரியாது தான் , நீங்க தான் அதை சொல்லணும் அதை விட்டுட்டி basic assumption தப்பா இருப்பது தான் மிக வருத்தம்.
இந்த படத்தில் வரும் கதை கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனையே நு கூட போடல, சுஜாதா மற்றும் கொச்சின் ஹனிபா க்கு இரங்கல் ,
எங்கயோ மாச்சு பீச்சு க்கு பொய் எடுத்தாங்க சேரின்னு பார்த்த . அது ஒரு லாங் சாட் ல கட்டுறாங்க அவ்ளோ தான். காதலர் தினம் ல தாஜ்மஹால் ல கஷ்ட பட்டு புது புது ஆங்கிலே ல கதிர் எடுத்து இருப்பார். அந்த லெவல் க்கு கூட இல்லை.
ஷங்கரை சொல்லி குற்றம் இல்லை அவரிடம் இருந்த சரக்கு தீர்ந்து விட்டது . என்று தான் சொல்ல வேண்டும்.ஷங்கர்யை இந்த படம் முடித்ததற்கு பாராட்ட வேண்டும் என்றாலும் ஷங்கரிடம் எதிர்பார்த்தது இன்னும் ஒரு படி மேல. பிரமாண்டமாக எடுக்க முயற்சி செய்தது இருக்கட்டும் ஒரு புறம் , ஆனால் கதையை நல்லா பட்டை தீட்ட முயற்சி செய்ய வேண்டும் ஷங்கர்.
பின் குறிப்பு : நான் ரோபோடிக்ஸ்ல பட்டம் பெற்றவன் என்ற முறையில் சொல்லுகிறேன். இந்த படம் சுத்த அபத்தம், இங்கிலீஷ் கரனுக்கு போட்டு காட்டின காரி துப்பிடுவான்.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
1 comments:
Mr.Mechatronics .... could you please list out the scenes that you consider as a lament... if u dont like someone better stop speaking about them, do not try to spread false news abt their work...
Post a Comment