Saturday, June 26, 2010

மதுரை முன்னேறாமல் இருப்பது ஏன் ?

மதுரை தமிழகத்தில் ஒரு காலத்தில் மிக பெரிய நகரம், மாவட்டம் என்ற எல்லா சிறப்பும் இதற்க்கு உண்டு. ஆனால் இன்றோ மதுரை மாவட்டத்தை பிரித்து தேனி , விருதுநகர் போன்ற புதிய மாவட்டங்கள் உருவாக்கபட்டன.

மதுரை தொன்று தொட்டு வரும் ஒரு நகரம். மதுரையை சேர்த்தவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் உள்ளனர். தாங்கள் மதுரை மக்கள் சொல்ல்வதில் மிகவும் பெருமை படுகின்றனர்.

மதுரையில் போதிய வளர்ச்சி இல்லாது ஏன் ?

மதுரையில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.

மதுரையில் சொல்லும்படியான பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. ஒரு தொழிற்சாலையினால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பலபேர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி உண்டு.

கடந்த ஐந்து வருடங்களில் புதிய தொழில் எதுவும் துவங்கவில்லை.

மதுரையில் (IT Park ) தகவல் தொழில் நுட்ப பூங்கா வருகிறது , வருகிறது என்று கூறி ( ரியல் எஸ்டேட் ) நில விலை ஏறியதே மிச்சம்.

ஆனால் மதுரை தவிர நகரங்களான கோவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு இதனால் நல்ல பணம் புழங்கும் நகரமாக மாறி வருகிறது.

மதுரை முன்னேறாமல் இருப்பது எதனால் ?
இதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல்வாதிகள் ( வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றியது இல்லை. அண்ணன் அழகிரி வந்துட்டாரு . மத்திய அமைச்சர் ஆயிட்டாரு மதுரைக்கு எதாவது செய்வாருன்னு பார்த்தல். அவர் பாராளுமன்றம் சென்றே நீண்ட நாட்கள் ஆச்சுன்னு செய்தி வெளியாகுது.

மக்களே நீங்களே சிந்தியிங்கள் .

நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே கூறவும் . நம்மால் முடிந்தது எதாவது செய்வோம்.

0 comments:

Post a Comment