Tuesday, June 8, 2010

சினிமா உலகம் 1

ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர்கள் யார் யார் என்று ஏற்கனேவே பார்த்தோம்.

இதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றி பார்போம்.

ஒரு திரைப்படம் வெற்றியடைய பல காரணம் உண்டு. அதன வெற்றி மற்றும் தோல்விக்கான அதிக பொறுப்பு ஒரு இயன்குனரையே சேரும்.

வெற்றி பெற்றால் அது நடிகரன் படம் என்றும் . வெற்றி பெற வில்லை என்றால் இயக்குனர் சரி இல்லை என்றும் சொல்ல கூடாது.

ஒரு நடிகன் என்பவன் இயக்குனர் சொல்லவதை கேட்டு அவர் விரும்பும் வண்ணம் படத்தை உருவாக்க உதவி செய்பவர்களில் ஒருவன். திரைபடத்தின் பின்னால் உழைப்பவர்கள் பல பேர் இருந்தும் நடிகற்கே அதிக சம்பளம்  என்பது வேதனைக்குரிய விஷயம்.

ஒரு இயங்குனர் தனது ஆற்றலளால் ஒரு படத்தின் கதையை உருவாக்குகிறார். அதற்கு திரைகதை அமைக்கிறார். அதை தயாரிக்க பணம் நிறைய தேவைப்படுகிறது. அப்போது தான் ஒரு தயாரிப்பாளரிடம்  கதை சொல்லுகிறார். அவர் இந்த படத்தில் தனது  பணத்தை முதலீடு செய்கிறார்.
இயக்குனர்க்கு இதனால் அதிக சம்பளம். அவருக்கு பொறுப்புகளும் அதிகம்.
அவர் எண்ணுவது போன்று படம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தயாரிப்பாளரிடம் நல்ல ஒத்துழைப்பு வேண்டும்.

ஒரு இயக்குனர் தான் நினைப்பது போன்று படம் எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு நல்லா கதை இருந்தாலும் அதை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வர வேண்டும். இது ஒரு வியாபாரம் ஆகிவிட்ட காரணத்தினால் தயாரிப்பாளர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பது எப்படி என்று தான் பார்க்கின்றனர். இதனால் இயக்குனர் தான் நினைப்பது போன்று ஒரு காட்சி படமாக்கவோ அல்லது மிகுந்த பொருட்செலவில் ஒரு காட்சி அமைப்பது சில சமயம் நடக்காமல் போய் விடுகிறது.

நாம் பல படங்களின் பூஜை பார்த்து இருப்போம். அதில் சில படங்கள் பாதியில் நின்று போய் இருக்கும். ஏன் என்று கேட்டல் தயாரிப்பாளர்ரிடம் பணம் இல்லை. இயக்குனர் விலகி விட்டார்  என்று பல செய்திகள் அடி படும்.

இதனால் தான் இன்று பல பெரிய இயக்குனர்கள்  தாங்களே ஒரு தயாரிப்பாளர் ஆகிஉள்ளனர். உதாரணத்திற்கு திரு. மணிரத்னம் அவர்கள் எடுத்த எல்லா படங்களுமே அவர் அண்ணன் ஜீ. வெங்கடேசன் அல்லது அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தான் தயாரிக்கும். ஏன் என்றால் ஒரு படம் நல்லா முறையில்  இயக்குனர் நினைத்தது போன்று படம் செய்ய ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு நல்லா தயாரிப்பாளர் என்பதை விட நல்ல பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவரது பணத்தில் ஆட்டம் போடும் எல்லாத்தையும் பார்த்து, அவர் பொறுமை காப்பது மிக மிக அவசியம்.

ஒரு இயக்குனர் முதல் படம் இயக்க ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது மிக மிக கடினம். எல்லா பெரிய இயக்குனர்களும் அவர்களது வாழ்கையை பற்றி சொல்லும் போதும் இதை பற்றி கண்டிப்பாக சொல்லுவார்கள். என் என்றால் இது அவ்ளோ லேசு பட்ட காரியம்அல்ல.

ஒரு வாய்ப்பு கிடைப்பது ( என்பது தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்ல ) என்பது மிக மிக கடினம். அதிலும் அந்த தயாரிப்பாளர் கேட்ட பிறகு  கதையில் தலையிடலாம் இருப்பது அதை விட மிக கடினம்.

இதனாலே பல பிரச்சனைகள் உருவாகிறது. தனக்கு தெரிந்த நடிகர் அல்லது நடிகை தேர்வு செய்ய வேண்டும், கதை கொஞ்சம் மாற்ற வேண்டும், செலவு கொஞ்சம் குறைக்க வேண்டும். குறுகிய காலத்துள் முடிக்க வேண்டும்.
எப்படி பல பிரச்சனைகள் எழும்.

இதனாலே பல இயங்குனர்கள் தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல புதிய இயக்குனர்க்கு வாய்ப்புஅளிக்கின்றனர்.



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைபடத்தில் வரும்  ஒரு காட்சி. இதில் அஜித் ஒரு புதிய இயங்குனர் அவரோட உணர்ச்சிகளை  நீங்கள் காணலாம். ( எதோ நான் சொன்ன கதைக்கு ஒத்து வரும் சீன்)

இப்படிசினிமா பற்று எழுதினால் எழுதிகிட்டேபோகலாம் .
நிறைய இருக்கிறது... தொடரும்.

0 comments:

Post a Comment