நான் இப்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பது இல்லை. எனக்கு கிரிக்கெட் பிடிக்காது என்று இல்லை. அதன் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. IPL தொடங்கிய உடன் இருந்த கொஞ்ச ஆர்வமும் போய் விட்டது.
அதற்கான காரணங்கள்
1.இப்போது நான் விளையாடுவது இல்லை.
2.பிசிசிஐ பணம் செய்யும் வித்தையை விட்டு நாட்டிற்கு என்று விளையாட வேண்டும்.
3.சூதாட்டம்
4.இந்தியா நன்றாக விளையாடுவது இல்லை.( பில்டிங் மற்றும் பந்து வீச்சு )
5.கங்குலி, அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றது.
கிட்ட தட்ட 16 வருடங்களாக நான் கிரிக்கெட் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் எனக்கு இந்த விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தில் யார் விளையாடினாலும் பார்பேன். உதாரணமாக பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியை ஒரு பந்து விடாமல் பார்த்தேன். ராவல்பிண்டியில் நடந்த அந்த போட்டியில் மார்க் டய்லோர் 331 அடித்து .. இன்னும் ஒரு ரன் அடித்தால் பிரட்மண் அதிக ரன் சாதனையை சமன் செய்யலாம். அப்போது அவர் எங்க கடவுள் போல, 1 ரன் அடித்தால் கடவுளுக்கும் எனக்கும் என்ன வித்யாசம் என்று ஆட்டத்தை முடித்து கொள்வார்.
சரி நம்ம நாட்டுக்கு வருவோம். இந்திய தென் ஆபிரிக்கா உடனான ஆட்டத்தை இழந்தது. இதற்க்கு காரணம் இந்தியாவில் சரியான பந்து வீச்சாளர் இல்லை என்பது தான். இது பல வருடங்கள இந்தியாவில் உள்ள பிரச்சனை. மட்டை தட்டுவதில் மிக சிறந்த வீரர்கள் சச்சின், கங்குலி, டிராவிட் என்று பலர் இருந்தாலும். ஒரு நல்ல பந்து வீச்சாளர் இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம்.
இந்தியா 500 ரன்கள் கூட எடுக்க கூடிய வல்லமை நம்மிடம் உண்டு. அதே நேரம் எதிர் அணி நமது பந்து வீச்சில் அதே 500 அடிக்க முடிகிறது என்றால் அதற்க்கு காரணம் நமது பந்து வீச்சின் தரம்.
இதே நமது பக்கத்து நாடு பாகிஸ்தானை எடுத்து கொள்வோம், அவர்களது பந்து வீச்சு எப்போதுமே அபாரமானது. வாசிம் அகரம், வாகர் யூனிஸ், ஷோயப் அக்தர் , உமர குள் என்று பலர் வந்து கொண்டே இருகின்றனர்.
நமது பந்து வீச்சை சரி செய்யாத வரையில் இந்தியாவுக்கு கோப்பையையும் கைபற்ற எந்த தகுதியும் இல்லை என்பதை நாம் மனதில் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நல்ல பந்து வீச்சாளர் யூசுப் பதான் தேர்வு செய்யபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஹட்ட் தரிக் எடுத்த வீரர் அவர். நல்ல ஆல்ரவுண்டுரர்ம் கூட.
இந்த உலக கோப்பை மட்டும் இல்லை இன்னும் எவ்ளோ உலக கோப்பை வந்தாலும் நம்மால் வாங்க முடியாது. ( படிக்காத ஒருவன் பரீட்சைக்கு சென்று முதல் மதிப்பெண் எடுப்பது போன்று நாம் உலக கோப்பை வாங்குவது )
Box Office Aug6th -2025
14 hours ago
0 comments:
Post a Comment