Tuesday, November 30, 2010

அஜித் ஹிட் பாடல்கள் !!

அஜித் ஹிட் பாடல்கள் என்று யூடுயூப்இல் தேடினால் ஒண்ணுமே வரல. அது ஏன் என்று எல்லாருக்குமே தெரியும். அஜித்க்கும் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். அஜித்க்கு ஏ அர் ரகுமான் இசையமைத்தால் கூட பாடல்கள் தேற மறுக்கின்றனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை.  இத்தனைக்கு விஜய்க்கு எந்த இசை அமைப்பாளர் பாடல் போட்டாலும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் வண்ணம் நன்கு அமைந்து விடுகிறது. பாடல்கள் நன்றாக இல்லை என்றால் கூட அவர் நடனத்தில் பாடல்கள் ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது .அது அவருடையோ அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வாய்ப்பு இங்கு இல்லை. அது மட்டும் இல்லை நல்ல பாடல்கள் கூட இவர்க்கு நடனம் நன்கு வராது என்று சுமார் என்று ஆன பாடல்கள் உண்டு . ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானிப்பதை இங்கு நீங்கள் காணலாம்.
விஜய் ஹிட் பாடல்கள் என்றால் ஒரு 50 முதல் 100 பாடல்கள் வந்து நிற்கும். இதுவே அஜித் என்பதால் 10 பாடல்கள் தேடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகி விட்டது. இதோ எனக்கு பிடித்த அஜித்இன் ஹிட் பாடல்கள் ( நான் கேட்கும் பாடல்கள் என்று கூட சொல்லலாம் )

பில்லா - சேவல் கொடி


உல்லாசம் - யாரோ யார் யாரோ


தீனா படத்தின் பாடல்கள் - வத்தி குச்சி


அமர்க்களம் பாடல்கள் - மேகங்கள் என்னை தொட்டு


வில்லன் - ஒரே மணம்


முகவரி - ஏ நிலவே


ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ


கிரிடம் - கனவெல்லாம் பலிக்குதே


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தன தென்றலை


ஆசை - கொஞ்ச நாள் பொறு தலைவா


காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்


காதல் மன்னன் பாடல்கள் - உன்னை பார்த்த பின்பு நான்


இதில் எதாவது பாடல்கள் விட பட்டு இருந்தால் பின்னூட்டம் போடவும்.

Tuesday, November 23, 2010

நந்தலாலா - இது ஒரு மிஷ்கின் படம்

நந்தலாலா ... இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவர வேண்டிய திரைப்படம். இப்போது தான் திரைக்கு வருகிறது. மிஷ்கின் மிக நல்ல டைரக்டர் என்று சொல்லுவதற்கு முன் .. அவர் எடுத்த இரண்டு படம் மிக பெரிய ஹிட .. முதல் படம் சித்திரம் பேசுதடி. இரண்டவது அஞ்சாதே .. அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு மிக அருமையாக இருக்கும். இளையராஜா இசை வேற.. திரை அரங்கம் வந்து படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படம்.
சென்ற வாரம் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினர். உதவி இயக்குனரை பற்றி தவறாக பேசினார் என்பது தான். ஏற்கனவே கேபிள் சங்கர் சொன்னது போல அவர் சொன்னதில் தப்பு இல்லை, சொன்ன விடம் தான் தவறு.

மிஷ்கின் பற்றி சிறு செய்திகள் .
இயக்குனர் அவதற்கு முன் 72 வேலை செய்துள்ளார்.
கடைசியாக லேண்ட்மார்க் - புத்தக கடையில் வேலை பார்க்கும் பொது இயக்குனர் கதிர் ( அதாங்க நம்ம காதலர் தினம், காதல் தேசம படைப்பாளி ) கிட்ட நிறைய புத்தங்களை எடுத்து கொடுத்து , இது படிங்க அது படிங்க என்று சொல்லி, அப்புறம் உதவி இயக்குனராக பணிக்கு சேர்ந்தார்.
புத்தகம் படிக்கும் ஆர்வலர். நாவல் படிப்பது போன்று இவரது படங்கள் இருக்கும்.
வாழ்வில் நெளிவு சுழிவு பார்த்தவர். பேச்சு மிக ஜாஸ்தி , மத்தபடி அவரிடம் சரக்கு இருக்கிறது.
உதவி இயக்குனராக ஒரு திருநங்கை சேர்த்து உள்ளார் என்பது ஒரு கொசுறு தகவல். உலக தரத்துக்கு படத்தை கொடுக்க வல்லவர்.
கதிர்டம் வேலை செய்யும் போது தான் கானா உலகநாதன் அங்கு கதிரிடம் வாய்ப்பு கேட்டு பாடி இருக்கிறார். அவரை சித்திரம் பெசுதடியில் உபயோக படுத்தி இருப்பார்.
அவரே வருத்த பட்டு கூறிய விஷயம் - " என்னை குத்து பாட்டு ச்பெசியாளிஸ்ட் என்று சொல்லி விட்டனர் " காரணம் வாழமீனு மற்றும் கத்தால கண்ணால பாடல்கள் தான்.
அஞ்சாதே படம் டைட்டில் போடும் அழகே தனி .. அதை பார்த்தே நான் இவரது ரசிகன் ஆனேன்.

Friday, November 19, 2010

நம்ம கோவில் தான் !!!!

Thursday, November 11, 2010

இன்னுமா இந்த உலகம் நம்புது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது பிரச்சனை மிக பிரமாண்டமாக வெடித்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அப்படி என்றால் என்ன ? என்று கூட சில பேர் கேட்பார்கள. ஒன் இல்லை ரெண்டு இல்லை 1,76,00,000  கோடி ரூபாய் ஊழல். யார் பணம் இது எல்லாம் மக்கள் பணம். யார் வந்து கேட்க போறாங்க ? என்ற அலட்சிய போக்கில் அடித்த கொள்ளை.
 1,76,00,000 கோடி - 17,60,00,00,00,00,000 முடியல . பார்போம் எதிர் கட்சிகள் ஒரே முடிவாக உள்ளனர்.

அதாவதுமுன்பு எல்லாம் ஊழல் என்பது எதோ சில கோடிகளில் நடக்கும் இப்போது எல்லாம் ஆயிரம், லட்சம் கோடி ஊழல் வந்து விட்டது.

மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இதில் ஒரு பகுதியை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தால் நாடு எங்கயோ போய் இருக்கும். ( முதல்வன் பட வசனம் தான் )


கிரிகெட் ல  ஊழல்,  தடகள போட்டிகளில் ஊழல் ( காமண் விலத் போட்டி) , வீடு கட்டினா ஊழல் ( அதர்ஸ் வீடு வசதி ) , பாலம் கட்டின ஊழல், வெள்ள நிவரனத்து, சுடுகாட்டு கூரை வரைக்கும்  ஊழல் நிறைந்த நாடாக் இந்திய இன்று இருக்கிறது. மிகவும் வேதனை பட வேண்டிய நேரம்.
இந்தியா பற்று விக்கிபீடியா  வில் படித்தால்

" Since the introduction of market-based economic reforms in 1991, India has become one of the fastest growing major economies in the world;[20] however, the country continues to face several poverty, illiteracy, corruption and public health related challenges"

ஏழ்மையை  ஒழிக்க தான் அரசாங்கம் இருக்கிறது என்று நினைத்தால், அந்த அரசாங்கம் தான் ஊழல் செய்கிறது. இதை இப்படியேவிட்டால் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஊழல் செய்தால் என்ன செய்ய முடியும், நம்ம வேற நாட்டுக்கு சென்று விடலாம் , நல்ல வாழ்கை வாழலாம் என்ற அவர்களது எண்ணத்தை ஒழிக்க வேண்டும். மிக கடுமையான தண்டனை தர வேண்டும், அவர்களுக்கு  உரிமை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இப்போது தான் புதிதாக தொடங்க பட்ட மாநிலம் ஜார்கண்ட் அங்கேயே ஒரு முதல்வர் 500  கோடி அடித்தார் என்றால்  , தமிழ்நாடு பல வருடமாக இருக்கிறது , இங்கு பல பேர் , பல முறை முதல்வராக இருந்து உள்ளனர் என்றால் யோசித்து பாருங்கள்.

போன வாரம்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தார். அவர் அவரது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினர், பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. நம்ம நாட்ல பிரதமரோ அல்லது எதாவது ஒரு முதல்வர்  நடனம் ஆடும வயதில் இருகிறாரா ? இன்னுமும் தள்ளு வண்டியில் வந்து நாட்டை காப்பாற்ற தான் வேண்டுமா ?
 







அமெரிக்க பிரதமர் ( அமெரிக்க ல பிரதமர் இல்லை என்று சொல்லாதிங்க ) , இங்கிலாந்து பிரதமர், மற்றும் இந்தியா பிரதமர் கடவுளிடம் சென்று எங்கள் நாடு எப்போது முன்னேறும் என்று கேட்டார்கள் .. இந்த நகைச்சுவையை அனைவரும் படித்து இருப்போம் அல்லது கேட்டு சிரித்து இருப்போம். சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் செய்ய வேண்டும், அதை கேட்கையில் எண் மணம் வேதனைபடுகிறது.

இனியாவது இருந்துங்கள் மக்களே.

Friday, November 5, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

உலகில் அனைத்து நாடுகளில் இருக்கும் நமது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளித்தல்,புத்தாடைகள் பட்டாசு, நல்ல பலகாரம் . உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவது தீபாவளி.

தீபாவளி முந்திய நாள் இரவு கடை வீதி செல்தல் .( எதோ Benz கார் 10 ரூபாய்க்கு வாங்குவதாக நினைப்பது )
 பட்டாசு வெடித்தல், அதில் பக்கத்துக்கு வீடுகளோடு போட்டு போடுதல், யார் வீட்டில் அதிக குப்பை இருக்கிறது என்று பார்த்தல்.
 சாலமன் பாப்பையா பட்டி மன்றம் , சன் டிவி கலைஞர் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல், புதிய படத்திற்கு செல்தல், கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசித்ததல்....  இந்த வருடம் விஜய் படம் வரவில்லை அதனால் தீபாவளியை புறக்கணிக்குறோம்   என்று போஸ்டர் ஓட்டுவதையே தொழிலாக கொண்டு சிலர் செயல் படுவார்கள் .