Thursday, October 28, 2010

எந்திரன் - வியாபார விபரம்

எந்திரன் வெளிவந்து முதல் 3 வாரங்களில் இந்தியாவின் அனைத்து வசூல் சாதனைகளை உடைத்து விட்டது என்பது பழைய செய்தி. எந்திரன் திரைப்படம் ஏன் எவ்ளோ மற்றும் எப்படி இவ்வளவு லாபம் வரும்அதை பற்றி பார்போம். முதல் மூன்று வாரங்களில் வசூல் மட்டும் 225 கோடி என்று சொல்லுகிறார்கள். படத்தின் மொத்தம் செலவு 150 கோடி என்றும் சொல்லி விட்டார்கள். எங்கே இப்பவே லாபம் பாத்தாச்சு. ஆனால் ரஜினி சொல்லுற மாதிரி "இனி தான் ஆரம்பம் " என்று கூட சொல்லலாம்.

சன் டிவி எப்படி ஓடுகிறது ? மெகா தொடர்கள், உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி போடும் திரைப்படங்களால் தான். எப்பவுமே சன் டிவி நல்லா படங்களை 10 கோடி முதல் 15 கோடி செலவு செய்து தயாரிப்பாளரிடம் வாங்கி கொள்ளும். அப்புறம் தீபாவளி நன்னாளில் இந்த படத்தை போட்டு அதில் வரும் விளம்பரத்தின்  மூலம் காசு பார்க்கும். நல்லா திரைப்படம் என்றால் முதல் முறையே அதிக விளம்பரம் வரும். அப்படியே அதில் நல்லா லாபம் , இது போக மறுமுறை ஒளிபரப்பும் போதும் விளம்பரம் வரும். இப்படி சன் டிவி ஒரு படத்தை வைத்து திரை கொண்டாட்டம் ,காமெடி டைம், புது பாடல்கள் , டாப் 10 பாடல்கள், டாப் 10  படங்கள் என்று பல ப்ரோக்ராம் தயார் செய்ய படுகிறது.

 இப்படி எப்பவுமே இன்னோருதனை (சினிமா காரனை) நம்பி தான் சன் டிவி ஓடுது . அதனால் ஏன் நம்மாலே படம் எடுக்க கூடாது என்று எடுக்க ஆரம்பித்த சன் டிவி. இதனால் அவர்கள் நடத்தும் 43 எப் எம் ரேடியோ, 2  தினசரி , 2 வார இதழ்கள் என்று எல்லாத்துக்கும் தீனி வழங்குகிறது. இது ஒரு வகையில் நல்ல மார்க்கெட்டிங் தந்திரமும் கூட .
எந்திரன்  பாடல் வெளியீடு -8 மணி நேரம்
எந்திரன் முன்னோட்டம் ( Trailer ) வெளியீட்டு விழா - 6 மணி நேரம்
வீடியோ பாடல் வெளியீடு ( இது யாரு கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல ) - 4 மணி நேரம்
எந்திரன் படம் எடுத்த விதம் ( Making of Endhiran சிவாஜி படத்துக்கு 5 நாள்.. தினமும் ஒரு மணி நேரம் போட்டாங்க .. இதுக்கு அத விட நிறைய நேரம் இருக்கும்) - 10 மணி நேரம்
100 நாள் விழா- 4 மணி நேரம்
500 நாள் விழா -  எப்படியும் ஒட்டிடுவங்க அதுக்கு ஒரு விழா - 8 மணி நேரம் 
உலகமெங்கும் எந்திரன் - 8 மணி நேரம்
இது எல்லாம் போக எந்திரன் படத்தை 2014 தீபாவளிக்கு போடுரப்ப இருக்கு பாருங்க விளம்பரம் .. 4 மணி நேரம்
இப்படி மொத்தமாக இவர்கள் 52 மணி நேரத்துக்கான சன் டிவி பிராய்ம் டைம் ( Prime Time )  அதிக TRP உள்ள ப்ரோக்ராம்களை ரெடி செய்து விட்டனர்.
ஒரு படத்தை விளம்பரத்தோட 3 மணி நேரம் சன் டிவி ஒளிபரப்பும். ( சில காட்சிகளை கத்தரித்து ) அப்படி பார்த்த எந்திரன் மூலம் திரை 17 படத்துக்கு இணையான வசூலை செய்து உள்ளனர் ( ஒரே ஒரு முதலீட்டில்) 17 * 3 = 51 மணி நேரம்.
ஒரு மணி நேரத்துக்கு சன் டிவியில் எவ்ளோ விளம்பரம் வரும் என்று யாராவது கணக்கிட்டு உள்ளார்களா ?
15 நிமிடத்துக்கு ஒரு 5 நிமிடம் என்று வைத்து கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் வரை விளம்பரம் போடா முடியும்.
15 * 20 லட்சம் ( ஒரு 30 வினாடி ஓடும விளம்பரம் 10 லட்சம் என்று கணக்கு .. இது கம்மி தான் .. ஒரு கணக்கு க்கு தான் ) = 300 லட்சம் = 3 கோடி .
52 மணி நேரம் *  3 கோடி  = 150 கோடி  ( வெறும் சன் டிவி மட்டும்)
திரை படம் 50 நாள் முடிவில் எப்படியும் 300 கோடி வசூலை தொட்டு விடும்.
டிவி வருமானம் - 150 கோடி ( சன் மட்டும் )
உசே , தேஜா , எப் எம் , பேப்பர் , நாளிதழ் இதர வருமானம் - 40 கோடி
ஆடியோ தகடு விற்பனை - 10 கோடி

அப்படி இப்படின்னு ஒரு 150 கோடி ரூபாய் முதலீட்டில் 500  கோடி வரை வியாபாரம் செய்து உள்ளனர்.  இதுக்கு நம்ம அண்ணே கேபிள் சங்கர் தான் பதில் சொல்லணும் ..இது சத்தியமா இல்லை இதை விட கூடவே வருமா ? இது வேற யாராலும் சத்தியம் இல்லை.  ஏவிஎம் கூட படம் எடுத்த இந்த அளவுக்கு அதை காசாக்கி இருக்க முடியாது.  இது போதாததுக்கு எந்திரன் படத்தில் ரஜினி உபயோகித்த உடைகளை ஏலம் விட போவதாக  கூட செய்திகள் வருது.
புதுமையாக எதாவது செய்யணும் என்றால் ... ஜுரச்சிக் பார்க் படத்துக்கு போட்ட செட் இன்னும் பத்திரமாக வைத்து அதுக்கு ஒரு நுழைவு கட்டணம் போட்டு கண்காட்சிக்கு வைத்து உள்ளனர். நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி செய்யலாம் ஆனால்இடம் தான் இல்லை.வெளிநாடுகளில் இந்த வசதி உண்டு.
எந்திரன் கதை என்னோடதுஎன்று கடந்த நாலு நாட்களாக செய்து வந்த வண்ணம் உள்ளது. சன் தரப்பில் அல்லது ஷங்கர் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணூம்... :)

கடைசில  காலியானது நம்ம பாக்கெட் தான் ....

Wednesday, October 20, 2010

விளம்பர இடைவேளிக்கு பிறகு தொடரும் ..

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைகாட்சி பார்க்க நேர்ந்தது. அரை மணி நேரம் கூட பார்க்கவில்லை அதற்குள் ஒரு 30 விளம்பரம்.  இது தீபாவளி நேரம் வேற .. ஒரே விளம்பரம் தான்

 அந்த எல்லா விளம்பரத்திலும் ஒரு சினிமா நட்சத்திரம். இதோ அந்த லிஸ்ட்


ஆச்சி மசாலா - தேவயாணி
ஆலுக்காஸ் - மாதவன் , விஜய்,சரத்குமார் ( தனி தனியே தான்.. இன்னும் சேர்ந்து வர மாதிரி எடுத்த ஒரு நிறுவனம் சரவணா மட்டுமே )
வீராஸ் - வ.பேட்டை - பாக்யராஜ்
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை  - ராதிகா
அக்சர் பெயிண்ட் - சந்தானம்
அல்ட்ர க்ரிண்டர்  - தேவயாணி
சென்னை சில்க்ஸ் - அனுஷ்கா
சரவணா ஸ்டோர்ஸ் - சூரியா
ஜெயச்சந்திரன் - சாயா சிங் , பூர்ணா ஸ்ரீ
எதோ ஒரு நகை கடை விளமபரம் - பத்மா பிரியா
போதிஸ் - நயன்தாரா
சாரதி வேஷ்டி - பிரசன்னா
கல்யாண சாரீஸ் - ஸ்ரேயா
தங்க மயில் - நதியா
ஸ்ரீ தேவி டேக்ஸ்டிலே - பாவனா
யுனிவர்சல் மொபைல் - மாதவன் 

இப்படி ஒரே சினிமாகரங்களா வரங்க. ஒரு விளம்பரம் எதுக்கு அவங்க பொருள் நல்லா இருக்கு நு விளம்பரபடுத்த. சினிமா கரங்க நிறைய வருவதினால் பொருள் மீது போக வேண்டிய கவனம் அவர்கள் மீது போகிறது.  Branding , Star value  எல்லாம் ஒகே . ஆனால் இங்கே அதன் முக்கிய காரணத்தை தவற விட்டார்களோ  என்ற ஒரு எண்ணம்.
இன்றைய உலகத்தில் விளம்பரம் முக்கியம் தான் அதே சமயம் ஒரு தரம் குறைந்த பொருள் பெரிய நடிகர் மூலம் விளம்பரம் செய்து விற்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நடிகர் பல விளம்பரத்தில் வந்தால் ரசிகர்கள் குழப்பம் ஏற்படும். ஒரு காலத்தில் விளம்பரத்திற்காக நான் டிவி பார்ப்பது உண்டு ஆனால் இன்று அது அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்ற போக்கில் போய் கொண்டு இருக்கிறது . விளம்பரம் செய்து விற்பனை கூட்டினார்களோ இல்லையோ ஆனால் போட்டி காரணமாக அதை செய்ய வேண்டி உள்ளது . கடைசியில் லாபம் யாருக்கு டிவி உரிமையாளர்க்கு  தான். யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.

நல்லா விளம்பரம் என்பது எப்பவுமே போட்டலும்  பார்க்கலாம் அந்த மாதிரி எடுக்கணும். இதோ ஒரு பொங்கல் ஆசியன் பெயிண்ட் விளம்பரம்.




இந்த விஜய் விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன் ...பார்த்து ரொம்ப  பீலிங் .. எப்படி எல்லாம் விளம்பரம் எடுக்குக்ரங்கா நு தான் .. இது என்ன படமா ??



ராஜீவ் மேனன் இருந்த நேரம் மிக அருமையாக இருக்கும்.தற்போது அதன் தரம் குறைந்து விட்டது என்பது தான் எனது வாதம்.
ஒரு நடிகரை வைத்து விளம்பரம் எடுப்பது என்பது படம் எடுப்பதற்கு சமம. அவர் நல்லா மவுசு இருந்தால் நன்றாக வரும் , அவர் சரி இல்லை என்றால் இவர்கள் விளம்பரம் , வர்த்தகம் எல்லாம் பாதிக்கும். சக்தி ஊறுகாய் மற்றும் ராஜ்மஹால் விளம்பரம் இங்கே சொல்ல வேண்டும் அவர்கள் தமன்னாவை வைத்து முன்பே விளம்பரம் எடுத்தார்கள்அப்போது அவர் சினிமாவில் இல்லை , இப்போது மிக பெரிய நடிகை.


விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , தற்போது இந்த விளம்பரம் பார்க்க நேரிட்டது . மிக அருமை , அற்புதம்.



இதை இரண்டு பாகமாக எடுத்து உள்ளனர். கடைசியில் சேர்த்தார்களா இல்லையா என்பது எடுத்த பாகம் ? அதை யாராவது பார்த்தல் எனக்கு சொல்லுங்களேன்.

Friday, October 15, 2010

11 பேர் கொண்ட குழு !!!

மதுரையில் அக்டோபர் 18 அன்று அ தி மு க நடத்தும் ஆர்பாட்டம் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி உள்ளது. முதலில் சென்ற மதம் நடப்பதாக இருந்தது. பின்னர் கொலை மிரட்டல் வந்ததை ஒட்டி தள்ளி வைக்கபட்டது. இப்போது தேதி நெருங்க நெருங்க போஸ்டர் கலாச்சாரத்துக்கு பெயர் போன மதுரை நகரில் மீண்டும் போஸ்டர் யுத்தம் துவங்கி உள்ளது.
அண்ணன் அழகிரி வாழ்க என்றும் ஜெயலலிதா வை எதிர்த்து தி மு க வினர் போஸ்டர் ஓட்டுகின்றனர். அதற்கு நேர் மாறாக அ தி மு க வினர் அழகிரி மற்றும் தி மு க அரசை எதிரித்து போஸ்டர் ஓட்டுகின்றனர். இருவருக்கும்  உள்ள யுத்தம் நன்கு தெரிந்ததே இருபினும் போஸ்டர் மூலம் அதை வெளி காட்டுகின்றனர்.
இதோ சில போஸ்டர் உங்கள் பார்வைக்கு.

 இவங்க creativity ஒரு அளவே இல்லாமல் போயவிட்டது. ஒபாமா வை கூட விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். இயக்குனர் ஷங்கர் கூட இவங்க கிட்ட வந்து ஐடியா கேக்கலாம். அந்த அளவுக்கு 11 பேர் கொண்ட குழு செயல் படுது.
 



















அதிமுக போட்டோ முதல்ல போட்டேன் என்பதற்காக நான் அதிமுக இல்லை. அதே சமயம் நான் திமுக வும் இல்லை. ( கம்யூனிஸ்ட் ம் இல்லை )
நடோடிகளில் வருவது போன்ற 11 பேர் கொண்ட குழு செயல் படுகிறது என்று நினைக்குறேன்.

Monday, October 11, 2010

விக்கிபீடியாவுக்கு உதவுங்கள்

நம்மில் அனைவரும் விக்கிபீடியா உபயோகித்து இருக்கிறோம். 
ஒரு பிரபலத்தின்  விபரமோ அல்லது நாட்டு நடப்போ எதுவாக இருந்தாலும் விக்கிபீடியா வில் அதை படித்து இருப்போம்
நமக்கு பலவழிகளில் உதவிய விக்கிபீடியா தற்போது உதவி கேட்கிறது. நம்மால் முடிந்த உதவி செய்வோம். ஒரு ரூபாயாக இருந்தாலும் அது உதவி தான்.

விக்கிபீடியா இல்லாத ஒரு இணையத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 


எந்திரன் மற்றும் ஷங்கர் திரைபடங்கள்

நேற்று தான் எந்திரன் பார்க்க முடிந்தது. எனக்கு படம் சுமார் என்று தான் தோன்றியது. ஷங்கரின் மிக பெரிய ரசிகன் நான். இந்த படத்தில் அவர் உழைப்பு தெரிகிறது  ஆனால் இந்தியன், முதல்வன் , அந்நியன், சிவாஜி , காதலன்  படங்களை மக்களுக்கு காட்டிய ஷங்கர் தானா என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது .

ஷங்கர்  திரைப்படங்களை பார்த்தால்
Gentleman - இது தான் அவரது முதல் படம் அதனால் இதில் அவர் விளையாட வில்லை. ஒரு நல்ல படம் , நன்கு ஓடியது . குஞ்சுமோன் தான் தயாரிப்பாளர்.

காதலன் - இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம் - நடனத்துக்கு முக்கியதுவம்  கொடுத்த படம். இதில் முக்கால முக்கபுள்ள என்ற பாடல் இன்று கேட்டால் கூட பார்க்க துண்டும் அளவுக்கு நல்ல கிராபிக்ஸ் .

இந்தியன் - இங்கு தான் தனது முத்திரையை பதித்தார். மர்ம கலை என்பதை இவர் மூலமாகதான் மக்கள் அறிந்தனர். கமல், நல்ல தேசப்பற்று மிக்க கதை நல்ல பாடல்கள்,  என்று இந்த படத்தை எங்கோ தூக்கி சென்றது.

ஜீன்ஸ் - இந்த படம் பிரசாந்துக்கு வாழ்வு கொடுத்த படம் என்ற சொல்லலாம். அமெரிக்காவை கௌதம் மேனன்க்கு  முன்னால் நன்றாக காட்டினர். உலக அழகி, உலக அதிசயம் என்று இந்த படத்தை 2 வருடம் எடுத்தார் . பாடல்கள் என்று கேட்டால்,  கூட இனிக்கும் அந்த அளவுக்கு நல்ல பாடல்கள்.

முதல்வன்- இந்த படம் ஒரு சாதாரண மனிதனை கூட சிந்திக்க வைத்த படம்.
 அனைவரும் இந்த படத்தை பற்றி அறிந்ததே.


பாய்ஸ் - கொஞ்சம் சறுக்கிய படம். தொழில்நுட்ப வகையில் என்னை கவர்ந்த படம். நல்ல கேமரா , மோசன்  பிரீஸ்

அந்நியன் - திரும்ப பழைய பார்முலா லஞ்சம, ஊழல் போன்றதை சொல்லிய படம். விடாது கருப்பு டிவி தொடர் கிளைமாக்ஸ் split பெர்சொனலிட்டி என்ற ஒரு கருத்தை படத்தில் காட்டினர்.

சிவாஜி - AVM ரஜினி ரஹ்மான என்று ஒரு பெரிய கூட்டணி . வெற்றியும் பெற்றது .அதற்கு மேல் இந்த படத்தில் எதுவுமே செய்ய முடியாது என்ற வரைக்கும் எடுத்த படம்.


இப்படிபட்ட இயக்குனர் இயக்கிய படம் எந்திரன். எந்திரன் Bicentennial man, Iron man, IRobo போன்ற படங்களின் சாயல் ரொம்ப இருந்தது. படத்தில் நேரிய விஷயங்களை சொல்ல ஷங்கர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் ஏனோ எனக்கு படம் ஒரு நிறைவை தரவில்லை. ரஜினியை வைத்து இவ்ளோ கஷ்ட பட்டு எடுத்த ஒரே இயக்குனர் இவராக தான் இருக்க முடியும்.

எல்லா படங்களுக்கும் 2 வருஷம் எடுத்த ஷங்கர் இந்த படத்தையும் 2  வருடம் எடுத்தது ஒரு ஆச்சிர்யம். இந்த படம் ஷங்கர் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்து இருந்தால் இன்னும் அருமையாக வந்து இருக்கும் என்பது எனது வாதம்.

பாடல்கள் மிக மோசமாக உள்ளது. அதற்கு செட் அந்த அளவுக்கு இல்லை. ஷங்கர் படம் என்றாலே செட் தான் ஞாபகம் வரும். சிவாஜி சகானால இருந்து ஆரம்பித்த இந்த பிரச்சனை,  இதில் பாடல்களுக்கான செட் நன்றாக இல்லை, நேற்று வந்த சிம்பு படத்தில் கூட பாடல்களுக்கு நல்ல செட் உள்ளது.

கிளைமாக்ஸ்  காட்சியில் ரஜினி எதோ ஒன்றை ஒரு பாக்ஸ்இல்  வைத்து அதை மூடி அப்புறம் ப்ரோக்ராம் செய்வர். அந்தபாக்ஸ் எங்க வீட்ல இருக்குற டேபிள் டிஜிட்டல்  காலெண்டர் - அது வெறும் 75 ரூபா தான் பிளாட்பாரம் கடைகளில் கூட கிடைக்கிறது.  இது தான் உங்கள் படமா ஷங்கர்.



அப்புறம் காதல் அணுக்கள் பாடலுக்கு லாங் சாட்ல இவங்க நடந்து வந்த கால சுவடுகள் தெரியும். அது நேரிய டைம் ப்ராக்டிஸ் பண்ணதுல நேரிய ஆயிடுச்சு. எப்பவுமே ஷங்கர் படத்தில் இதை கூட சரி செய்து தான் படம் எடுப்பார். எதோ இதை விட்டு விட்டார்.


இதுல சிட்டி ரோபோவ - அல்லது சூப்பர் மண் என்ற ஒரு சந்தேகம் வருது.
மேலை நாடுகளில் அவர்கள் இந்த மாதிரி படம் எடுத்தாலும் அதில் அவர்கள் இசாக் அசிமோவ் விதி என்று ஒன்று உள்ளது அதை தான் முதலில் சொல்லுவார்கள்  ஆனால் இந்த படத்தில் அதை பத்தி எல்லாம் கவலையே படவில்லை ஷங்கர். மக்களுக்கு தெரியவா போகுது என்று கேட்டால். மக்களுக்கு தெரியாது தான் , நீங்க தான் அதை சொல்லணும் அதை விட்டுட்டி basic assumption  தப்பா இருப்பது தான் மிக வருத்தம்.

இந்த படத்தில் வரும் கதை கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனையே நு கூட போடல, சுஜாதா மற்றும் கொச்சின் ஹனிபா க்கு இரங்கல் ,

எங்கயோ மாச்சு பீச்சு க்கு பொய் எடுத்தாங்க சேரின்னு பார்த்த . அது ஒரு லாங் சாட் ல கட்டுறாங்க அவ்ளோ தான். காதலர் தினம் ல தாஜ்மஹால்  ல கஷ்ட பட்டு புது புது ஆங்கிலே ல கதிர் எடுத்து இருப்பார். அந்த லெவல் க்கு கூட இல்லை.

ஷங்கரை சொல்லி குற்றம் இல்லை அவரிடம் இருந்த சரக்கு தீர்ந்து விட்டது . என்று தான் சொல்ல வேண்டும்.ஷங்கர்யை இந்த படம் முடித்ததற்கு பாராட்ட வேண்டும் என்றாலும் ஷங்கரிடம் எதிர்பார்த்தது இன்னும் ஒரு படி மேல. பிரமாண்டமாக எடுக்க முயற்சி செய்தது இருக்கட்டும் ஒரு புறம் , ஆனால் கதையை நல்லா பட்டை தீட்ட முயற்சி செய்ய வேண்டும் ஷங்கர்.

பின் குறிப்பு : நான் ரோபோடிக்ஸ்ல பட்டம் பெற்றவன் என்ற முறையில் சொல்லுகிறேன். இந்த படம் சுத்த அபத்தம், இங்கிலீஷ் கரனுக்கு போட்டு காட்டின காரி துப்பிடுவான்.

Wednesday, October 6, 2010

சிந்தனைக்கு சில

வாழ்வில் நமக்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுவதற்குச் சிரமப்படுகின்றோம். நாமாகப் பெறும் உந்துசக்தியைவிட வெளியிலிருந்து வருவது வலுவாக உள்ளது.
நாம் பெற்ற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில யோசனைகள் இதோ:
உந்துசக்தி உன்னிடமே உள்ளது. நீயேதான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்; பிறர் உனக்குத்தருவது ஊக்கம் மட்டும்தான்.
  • உலகுக்கு நீ ஏன் வந்துள்ளாய் என்று உணர்ந்தால் உன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.
  • சரியாகத் தோற்றமளிப்பது ஒன்று; சரியாக இருப்பது மற்றொன்று. இவற்றில் பின்னதையே தேர்வு செய்.
  • நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், உனக்குள்ளே தனித்தன்மை கொண்ட பெரும் ஆற்றல் உள்ளது.
  • கடும் உழைப்பு, ஒருவரது விருப்பமல்ல – அது ஒரு கட்டாயம்.
  • நேர்மை – பேரம் பேசக்கூடியதோ அல்ல. நேர்மை மட்டும் இருந்துவிட்டால், யாவும் பின்தொடர்ந்து வரும்.
  • எதை நினைக்கிறாயோ அதுவே உன் நடத்தை. எவ்வாறு நடந்துகொல்வாயோ, அதுவே உன் மரியாதை, மதிப்பு எல்லாம். அதனால் சிந்தனையைச் செம்மைப்படுத்து.
  • உலகத்தின் விரிவான அமைப்பில் நீ ஒரு சிறு புள்ளி மட்டுமே. அதனால் அடக்கமாக இரு.
  • ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய நுணுக்கத்தைக் கற்கவில்லை என்றால் வேலை செய்வதை நிறுத்து.
  • தெளிவான பங்கேர்பைவிட தெளிவான இலக்கே மிக அவசியம்.
  • தரம் என்பது ஒரு பிரிவல்ல, அது ஒரு வாழ்வு முறை.
  • கூற நினைத்தால் கூறிவிடு. ஊமைபோல் நடிக்காதே. மோசமாகத் தோற்றுப்போகும் நிலை எப்போதும் வரவே வராது.
  • இன்றைக்கு நீ யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா? இல்லை என்றால் இன்று நீ வாழவே இல்லை. பல உயிரற்றப் பொருள்களுடன் நீயும் ஒன்றாக இருந்திருக்கிறாய்.
  • மகிழ்ச்சியை நீ தேடு, பணம் உன் பின்னே வரும். பணத்தைத் தேடினால் உன் பின்னால் மகிழ்ச்சி வராது!
  • உன்னைக் கோபித்தார்களா, வியாபாரத்தில் நஷ்டமா, உறவு ஏதும் முறிந்துவிட்டதா – இது உன் நல்ல நேரம் – அதற்கு நன்றி சொல். இது உனக்கு நடந்த நல்ல நிகழ்வு.
  • அடுத்த நிகழ்வைப் புதிதாகத் துவக்க ஒரு நல்ல வாய்ப்பு.
    என்ன நடக்க வேண்டும என்று நீ நினைப்பது நடந்துவிட்டால் சந்தோஷம். நடக்க வேண்டும் என எண்ணியது நடக்கவில்லை எனில் இரட்டிப்பு மகிழ்ச்சி; கொண்டாடு.
  • பிறரை நீ ஈர்ப்பதற்கு உண்மையே பேசு.
    கடவுள் உனக்கு வகுத்துள்ள திட்டத்தில் தவறு கிடையாது. பிரச்சனையைச் சந்தித்தால், அதன் தீர்வில் ஒரு பங்காக இருக்க முயற்சி செய்.
  • உன் தொலைநோக்கு, இலக்கு, செயல்பாடு ஆகியவற்றில் உறுதியாக இரு.
  • வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய நேரத்தில் வாழ்நாளுக்குள்லேயே பயன்படுத்த வேண்டும். ஆரப் போடாதே.
  • நீ நீயாக இருப்பதற்காக, உன் பெற்றோர், ஆசிரியர், வழிகாட்டி அனைவருக்கும் நன்றி கூறு.
(நன்றி: Career Sutra by Avis New Indian Express)
தமிழில்: பேராசிரியர் ஹரிஹரன்

நன்றி ராமகிருஷ்ண விஜயம்.
http://ramakrishnavijayam.com/?p=325