Sunday, May 30, 2010

செம்மொழியான தமிழ்மொழியே - வீடியோ

செம்மொழியான தமிழ்மொழியே
 
கோவையில் நடைபெற இருக்கும் தமிழ் மாநாட்டிற்கு ரஹ்மான இசையில், மு.கருணாநிதி எழுத்தில் , கௌதம் மேனன் இயக்கிய பாடல் இதோ உங்களுக்காக.

இதில் பாடியவர்கள்
டி.எம்.சௌந்தரராஜன் , ரஹ்மான்,ஹரிணி ,சின்மயி ,ஹரிஹரன் ,கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீனிவாஸ்,பம்பாய் ஜெயஸ்ரீ , அனுராதா ஸ்ரீராம், விஜய் யேசுதாஸ்,  சுசிலா , சிவமணி , நித்யஸ்ரீ மகாதேவன் , காயத்ரி , நரேஷ் ஐயர் , சௌம்யா ,  ஸ்ருதி ஹசன், ப்ளாஸ் ( என்ற லக்ஷ்மி நரசிம்ஹா விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்ம ராஜேஷ் ராமன் ) மற்றும் சில நாட்டுப்புற பாடல் கலைஞர்கள்


நடித்தவர்கள் : அங்காடி தெரு அஞ்சலி , மகேஷ். மற்றும் பலர்.


இதை தமிழ்நாட்டில் சிறப்பு மிக்க இடம்களில் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை. மகாபலிபுரம்,அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி. மலைகோட்டை மற்றும் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் , பொய்கால் குதிரை, ஐயனார் சிலை   போன்ற தமிழ்நாட்டின் சிறப்புமிக்க எல்லா அம்சங்களையும் சேர்த்து உள்ளனர்.


கடைசியில் கலைஞர் மு. கருணாநிதி கையப்பம் இடுவது போன்ற ஒரு காட்சியில் வருகிறார்.







Saturday, May 29, 2010

சிங்கம் திரை விமர்சனம்

சிங்கம் திரை விமர்சனம்

நீண்ட நாள் கழித்து தமிழில்ஒரு நல்ல படம் வந்து இருக்கிறது.
பார்க்க நல்ல படம். மொத்தத்தில்  ஒரு மசாலா திரைப்படம்

சூர்யாவின் 25 வது படம்.
கில்லி, காக்க காக்க மற்றும் சாமி ஆகிய படங்களின்  சாயல் கொஞ்சம் இருக்கிறது.
ஆனால் படம் கொஞ்சம் வித்தியாசமாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

படத்தில் வரும் சூர்யா நன்றாக நடித்து இருக்கிறார். அனுஷ்கா நன்றாக நடித்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஒரு பொருத்தம் இல்லை,.  அனுஷ்கா சூர்யா விட உயரம் அதிகம் என்பது சில இடங்களில் நன்றாக தெரிகிறது.

படத்தில் விவேக் ரொம்ப வெட்டியாக வந்து செல்கிறார். சிரிக்க வைக்கவேண்டும் என்று பகீரத முயற்சி செய்கிறார்.

வில்லனாக பிரகாஷ் ராஜ் எப்பவும் போல் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
படத்தின்  2 வது பாதி அசுர வேகத்தில் செல்கிறது.  மக்கள் யோசிக்க நேரம் தர கூடாது என்று இயக்குனர் நினைத்து இருக்கிறார்.

நிறைய காட்சிகள் வேகமாக  (fast forward)  செல்கிறது.
ஒளிபதிவாளர் பிரியன் ஹரியுடன் சாமி மற்றும் வேல் செய்தவர் .
வழக்கமாக  ஒரு நெடிய ( Long Shot ) காட்சி கிரேன் உபயோகித்து எடுப்பார்கள்.
இதில் அது போல் பல காட்சிகள்.திருவான்மியூர் மற்றும் சென்னை சேர்ந்த காட்சிகள் ஏரியல் (aerial view) அதிகம் பயன் படுத்தி இருகின்றனர்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத் ... பரவாஇல்லை எதோ முயற்சி செய்து இருக்கிறார்.

வழக்கமாக ஹரி படத்தில் வரும் எல்லாமே இங்கும் உண்டு.
வீடு, கிராமம், சொந்த பந்தம், அருவாள் இதில் உண்டு. 

வசனம் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் அன்பாக பேசி திருத்துவது போலவும் எழுதி இருக்கிறார்.


படத்தின் சிறப்பு அம்சங்கள்

- திரை கதை ஓட்டம், பட தொகுப்பு.
- இயக்குனர் ஹரி 
- சூர்யா, பிரகாஷ் ராஜ்  நடிப்பு


எதிர்பாத்து ஏமாந்த விஷயங்கள்
- பாடல்கள் ( ஒபெனிங் பாடல் ) எல்லா ஹரி படங்களிலும் நன்றாக இருக்கும்
சோடாபாட்டில் கையிலே - ஆறு ,
திருநெல்வேலி அல்வாடா - சாமி ,
இந்த ஊரில் எப்பவுமே கேட்டதே நடக்காதுடா - வேல்

அந்த வரிசையில் பாடல் இல்லை.

மொத்தத்தில்
ஹரி - சூர்யா கூட்டணியில் மற்றும் ஒரு வெற்றி படம்.

சிங்கம் - தனி காட்டு ராஜா

Tuesday, May 18, 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்

Wednesday, May 12, 2010

மாம்போ மார்ட்

தமிழகத்திற்கு ஒரு வலைத்தளம் அங்காடி .



Sunday, May 9, 2010

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

இன்று அன்னையர் தினம் . அன்னையின் பண்புகள் அனைவருக்கும் தெரிந்ததே.
அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இதனால் தான் எல்லா படங்களிலும் தாயை பற்றி கூறுகின்றனர்.

அன்னையும் தந்தையும் -  ஹரிதாஸ் மூத்த தமிழ் படம் பாடல் உங்களுக்காக



மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல்





ரஜினி பாடல் எல்லாருக்கும் தெரிந்தது


கமல் பாடல்



அன்று முதல் இன்று வரை தாய் நாடு , தாய் வீடு , தாய் மண் , தாய் மொழி என்று எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள்.

Saturday, May 8, 2010

கிருஷ்ணன் - (CNN Heroes) - மதுரையின் நாயகன்

கிருஷ்ணன் என்பவர் மதுரையில் அக்ஷய டிரஸ்ட் நடத்தி வருகிறார்.  இவரை நான் நிறைய கேள்வி பட்டு இருக்குறேன் . எனது தந்தை கூட சில சமயம் இவரை மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள நடை பாதையில் உணவு வழங்கும் போது பார்த்து இருக்கிறார். தற்போது இவர் அமெரிக்க CNN தொலைகாட்சியின் " THE HERO"  - நாயகன் ( தமிழ்பட கதாநாயகன் இல்ல ) உண்மையான நாயகன் என்ற தலைப்பில் இவரை பற்றி எழுதி உள்ளனர் . அமெரிக்க வரை  போய் உள்ள இந்த செய்தி.



இவரை பற்றி இட்லிவடை அன்றே சொன்னது ... எதோ உங்களுக்காக அந்த செய்து.  தேதி ஆகஸ்ட் 15.. 2009

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.

பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(
செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.

”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட் சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்



தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html




Saturday, May 1, 2010

உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்


இன்று மே 1.
உலக உழைப்பாளர்கள் தினம்.


வியர்வை சிந்தி உழைப்பவர்கள் அனைவருமே உழைப்பாளிகள் தான்.

ஒருவன் ஒருவன் முதலாளி ..... உலகில் மற்றவன் தொழிலாளி ..

இந்த உலகத்தில் உழைத்தால் தான் வழ முடியும்.
சும்மா இருந்தா  யாரு போடுவாங்க சோறு.

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் மற்றும் ஒரு முக்கிய நாள். அஜித் பிறந்தநாள் நாள்.  அவருக்கு நமது வாழ்த்துக்கள் .